மேற்கு வாங்க சட்டசபை முடக்கம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Share this News:

சென்னை (13 பிப் 2022): மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள ஆளுநர் ஜக்தீப் தன்கர்ம்க்கும் , முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.’எனக்கு எந்த மரியாதையும் கொடுப்பதில்லை; நான் கேட்கும் கேள்விகள், விளக்கங்களுக்கு பதில் அளிப்பதில்லை’ என, மாநில அரசு மீது, கவர்னர் குற்றஞ்சாட்டுகிறார் ஆளுநர் .மாநில அரசோ, ‘சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துகிறார்’ என குறை கூறுகிறது.

ராஜ்யசபாவில் திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர் சுகேந்து சேகர் ராய், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கரை திரும்ப பெற வலியுறுத்தி, தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்தார்.மேற்கு வங்க சட்ட சபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச்சில் கவர்னர் உரையுடன் துவங்க இருந்தது. இதில் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற திரிணமுல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் புதிய திருப்பமாக மேற்கு வங்க சட்டசபையை முடக்கி, கவர்னர் ஜக்தீப் தன்கர் அதிரடியாக உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்கு வங்க சட்டமன்றத்தை முடக்கிய ஆளுநரின் செயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply