பொறியியல் மாணவி படுகொலையில் வகுப்பு வாத சாயம் பூச முயற்சி!

Share this News:

மைசூர் (08 செப் 2022): மைசூருவில் பொறியியல் மாணவி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் முக்கிய பத்திரிகையாளர்கள் உட்பட இந்துத்துவா ஆதரவாளர்கள் பலர் வகுப்புவாத சாயம் பூச முயற்சியுள்ளனர்.

கர்நாடக மாநிலம் ஹுசூர் சாலையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் 21 வயதான பொறியியல் மாணவி அபூர்வா ஷெட்டி, கொலை செய்யப்பட்டார், அங்கு அவர் தனது காதலன் ஒருவருடன் உடன் தங்கியிருந்ததாகக் கூறியுள்ள ஒரு மாலை நாளிதழான ‘ஸ்டார் ஆஃப் மைசூர்’ கொல்லப்பட்ட மாணவியுடன் இருந்தது ஆஷிக் என்ற காதலன் என செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வைரலானது.

இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, சில நெட்டிசன்கள் அதற்கு வகுப்புவாத சாயம் பூசினர்.

பெண் மற்றும் பையனின் புகைப்பட படத்தொகுப்பைப் பகிர்ந்துகொண்டு, சுதர்சன் தொலைக்காட்சியின் பத்திரிகையாளர் சாகர் குமார், உள்ளிட்ட முக்கிய பத்திரிகையாளர்களும் வகுப்புவாத சாயம் பூசினார்.

இருப்பினும், Alt News இன் உண்மைச் சரிபார்ப்பில் குற்றம் சாட்டப்பட்டவரின் பெயர் ஆஷிக் அல்லா ஆஷிஷ் என்ற உண்மையை வெளி கொண்டு வந்தது.,குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் கொலையான இருவரும் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தேவராஜா காவல் நிலையமும் உறுதி உறுதி செய்துள்ளது.


Share this News:

Leave a Reply