காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீடு மீது கொடூர தாக்குதல்!

Share this News:

புதுடெல்லி (16 நவ 2021): காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் வீட்டின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் இந்துத்துவாவை ஐஎஸ்ஸுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார்.

இந்த புத்தகத்திற்கு சங்க பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங், புத்தகத்தைத் தடை செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் நைனிடாலில் உள்ள சல்மான் குர்ஷித் வீடு தாக்கப் பட்டுள்ளது. வீடு தாக்கப்பட்ட வீடியோவை சல்மான் குர்ஷித் அவரது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவரது வீட்டின் முன் பகுதி தீபிடித்து எரிவது காணப்படுகிறது.

முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி உட்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply