மும்பைக்கு காத்திருக்கும் அடுத்த அதிர்ச்சி!

Share this News:

மும்பை (04 ஜூலை 2020): கொரொனாவால் மகாராஷ்டிர பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வானிலை மைய்யம் அறிவிப்பால் பீதியில் உள்ளனர் மும்பை மக்கள்.

மும்பை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் நேற்று பலத்தமழை பெய்ததால் பல பகுதிகளில் தண்ணீர் புரண்டு ஓடியது. இதனால் மக்கள் பலர் அவதிக்குள்ளாகினர். இதில் தாதர், மாட்டுங்கா, வோர்லி, லால்பாக், கிங் சர்கிள், சியன், குர்லா, அந்தேரி உள்ளிட்ட பல இடங்களில் குடியிருப்புகளை நீர் சூழ்ந்தது. இதனால் அந்தேரி சுரங்க பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மும்பையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜூலை 3 முதல் 4 வரை மும்பை, ரைகாட் மற்றும் ரத்தனகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மும்பை மக்கள் பெரிதும் பீதியில் உள்ளனர்.


Share this News: