உத்திர பிரதேசத்தில் பசுக்களுக்கான ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம்!

லக்னோ (16 நவ 2021): உத்தரபிரதேசத்தில் பசுக்களுக்காக சிறப்பு ஆம்புலன்ஸ் சேவையை அரசு தொடங்கியுள்ளது. மோசமான நிலையில் உள்ள பசுக்களுக்காக இந்த சேவை தொடங்கப்படும் என்று விலங்குகள் நலன் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய திட்டத்தின் ஒரு பகுதியாக 515 ஆம்புலன்ஸ்கள்யஆரம்பத்தில் அமைக்கப்பட்டுள்ளன. இத்திட்டம் டிசம்பரில் அமலுக்கு வரும். அவசரகால இலக்கமான 112க்கு ஆம்புலன்ஸ் சேவையை அழைக்கலாம் என்று அமைச்சர் கூறினார். மேலும் அழைப்பு வந்த…

மேலும்...

இந்து மக்கள் கட்சி நிர்வாகியின் உயிரை காப்பாற்றிய தமுமுகவினர்!

திருப்பூர் (19 மே 2020): திருப்பூரில் மாமனாரால் வெட்டப்பட்டு உயிருக்குப் போராடிய இந்து மக்கள் கட்சி நிர்வாகி மணிமாறனை தமுமுக ஆம்புலன்ஸ் மூலம் உரிய நேரத்தில் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டதால் அவரது உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தகராறு காரணமாக இந்து மக்கள் கட்சி நிர்வாகியை வெட்டிய மாமனாரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகேயுள்ள, பெருமாநல்லூர் பகுதியை சேர்த்தவர் மணிமாறன். இவர் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவராக உள்ளார். இந்நிலையில் மணிமாறனுக்கும் அவரது…

மேலும்...

கொரோனா பாதிகப்பட்டால் உதவ தயார் நிலையில் இலவச ஆம்புலன்ஸ் – VIDEO

கரூர் (18 மார்ச் 2020): கரூர் எம்.ஆர்.வி டிரஸ்ட் மற்றும் கொங்கு ஆம்புலன்ஸ் இணைந்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு உதவ கொங்கு ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலையடுத்து ஆங்காங்கே பொதுமக்கள் பெருமளவில் அச்சத்திற்குள்ளாகியுள்ள நிலையில். இந்தியாவில் ஒரு சில இடங்களிலும், ஒரு சில மாநிலங்களிலும் பரவிவரும் இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரிக்கின்றது. இந்நிலையில், தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள்…

மேலும்...

கத்தாரில் அவசர சிகிச்சைக்கு உதவும் வகையில் ட்ரோன் சேவை அறிமுகம்!

தோஹா (09 ஜன 2020): அவசரச் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸுகளுக்கு உதவும் வகையில் ஆளில்லா விமான (ட்ரோன்)  சேவையை கத்தார் நாடு அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்து உள்ளிட்ட சம்பவங்களில் பாதிக்கப் பட்டவர்களுக்கு துரிதமாக மருத்துவ உதவி கிடைக்கும் வகையில், ட்ரோன்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லும். சம்மந்தப் பட்ட இடம், நோயாளி, மற்ற தேவைகள் குறித்து துல்லியமாகப் படம் பிடித்து உடனடியாக ஆம்புலன்ஸ் அதிகாரிகளுக்கு அனுப்பும். இதன்மூலம் நோயாளியின் தன்மையை முன்கூட்டியே அறிந்து ஆம்புலன்ஸுகள் விரைவில் சம்பவ இடங்களுக்குச்…

மேலும்...