மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க அரசுப் பள்ளியின் அடடே அறிவிப்பு!

கடலூர் (22 ஆக 2020): கடலூர் அருகே அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு ரூ 2000 அன்பளிப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது.. கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோயிலில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் சுமார் 350 மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே இப்பள்ளியில் மாணவர் சேர்க்கை வெகுவாகக் குறைந்து கொண்டே வந்துள்ளது. இப்படி ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை…

மேலும்...

விநாயகர் சதூர்த்தி அன்று விநாயகர் கோவிலில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

கடலுர் (22 ஆக 2020): விநாயகர் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் வடக்கு ரத வீதியில் அமைந்துள்ளது கற்பூர விநாயகர் கோயில். அதே பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் கோயில் பூசாரியாக இருந்து நாள்தோறும் சுவாமிக்கு பூஜைகள் செய்து கோயிலைக் கவனித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று (21.08.2020) பூசாரி முத்து வழக்கம்போல கோயில் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலை பூட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார். இன்று விநாயகர்…

மேலும்...

தோப்புக்கரணம் போட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

சேலம் (22 ஆக 2020): விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோப்புக்கரணம் போட்டு விநாயகனை தரிசித்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது இல்லத்தில் சிறிய அளவிலான விநாயகர் சிலை வைத்து விநாயகர் சதூர்த்தியை கொண்டாடியுள்ளார். மேலும் பய பக்தியோடு விநாயகர் முன்பு தோப்புக்கரணம் போட்டு தரிசனம் செய்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்….

மேலும்...

96 வயது விடுதலை போராட்ட போராளி விரைவில் டிஸ்சார்ஜ்!

சென்னை (21 ஆக 2020): உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு விரைவில் வீடு திரும்புகிறார். நல்லகண்ணுக்கு நேற்று இரவு திடீரென்று அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது உடனே அவருடைய பேரன் நள்ளிரவிலேயே அவரை சென்னை ராஜீவ்காந்தி பொது மருத்துவமனையில் அனுமதித்தார். மேலும், இன்று காலை அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடைபெற்றது. பிற்பகலில் அந்தப் பரிசோதனை முடிவு வந்தபோது அவருக்கு எந்தத்…

மேலும்...

கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

சென்னை (21 ஆக 2020): இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நல்லக்கண்ணுவின் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மேலும்...

பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை குறித்து ராணுவ மருத்துவமனை தகவல்!

புதுடெல்லி (20 ஆக 2020): முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவ மருத்துவமனை வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த வாரம் பிரணாப் முகர்ஜி (84) மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனை சென்றபோது, அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மூளையிலிருந்த ரத்த உறைவு காரணமாக அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக ஏற்கனவே…

மேலும்...

மத்திய அரசின் சதித்திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க முடியாது- வை.கோ. கடும் கண்டனம்!

சென்னை (20 ஆக 2020): ஒரே நாடு; ஒரே பணியாளர் தேர்வு முகமை மூலம் இனி அரசுப் பணியாளர் தேர்வினை நடத்தி நியமனங்கள் செய்யும் புதிய திட்டத்தினை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று (19.08.2020) எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஜிதேந்திர சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விளக்கி உள்ளனர். அதில், மத்திய அரசின் பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கு, தேசிய அரசுப்…

மேலும்...

சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் மரணம்!

சென்னை (20 ஆக 2020): சட்டமன்ற கதாநாயகன் என்று போற்றப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் ரஹ்மான்கான் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை ரஹ்மான்கானுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ரஹ்மான்கான் திமுக ஆட்சியில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ரகுமான்கான். திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினராகவும் ரகுமான் கான் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ரஹ்மான்கான் மறைவையொட்டி திமுக…

மேலும்...

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்!

சென்னை (19 ஆக 2020): பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி, உடல் நிலை ஆரம்பத்தில் சீராக இருந்தது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மூச்சுத்திணறல் அதிகரித்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் வெண்டிலேட்டர் பொறுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. எஸ்.பி.பி. உடல் நிலையை…

மேலும்...

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ஈரோடு (19 ஆக 2020): கொரோனா முழுவதும் இல்லாமல் போன பிறகே பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. கொரோனா பாதிப்பு…

மேலும்...