அடுத்த மாதம் திரையரங்குகள் திறக்க வாய்ப்பு!

புதுடெல்லி (19 ஆக 2020): கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலலியில், அடுத்த மாதம் முதல், நாடெங்கும் திரையரங்குகள் திறக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உணவகங்கள், ஜிம்கள் மற்றும் மால்கள் மெதுவாக திறக்கப்பட பிறகு, ஆகஸ்ட் கடைசியில் அடுத்த கட்ட அன்லாக் செயல்முறைக்கான அறிவிப்புகளில் சினிமா அரங்குகளை திறப்பது பற்றி தெரிவிக்கப்படும் என கூறப்படுகிறது. கடுமையான தனி மனித இடைவெளி (Social Distancing) மற்றும் சுத்திகரிப்பு விதிகளோடு, மற்ற கட்டிடங்களைச் சாராமல் தனியாக இருக்கும்…

மேலும்...

பி.எம்.கேர்ஸ் நிதியில் சீன நிறுவனங்களின் பங்கு? – ப.சிதம்பரம் சரமாரி கேள்வி!

சென்னை (19 ஆக 2020): கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு பிஎம் கேர்எஸ் நிதியிலிருந்து எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார். இதுகுறித்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கூறியிருப்பதாவது: “பிஎம் கேர்ஸ் நிதியின் சட்டப்பூர்வத்தையும், சட்டப்பொறுப்பு குறித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இறுதியானது. ஆனால், அறிவார்ந்தவர்கள், கல்விவட்டாரங்களில் பிஎம் கேர்ஸ் குறித்த பல்வேறு கேள்விகள் நீண்டகாலத்துக்கு எழுப்பப்படும். ஏனென்றால், பிஎம் கேர்ஸ் நிதியின்…

மேலும்...

காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிதியுதவி!

சென்னை (19 ஆக 2020): தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணைத் தலைவரும், மேடைப் பேச்சாளருமான வாய்ச்சவடால்’ குருசாமிக்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். 78 வயதான வாய்ச்சவடால்’ குருசாமி, முதுமையின் காரணமாக உடல்நல பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவச் செலவுகளைச் சமாளிக்க முடியாத அவரது தற்போதைய நிலையை, அவர் வசித்துவரும் சித்துராஜபுரம் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு சென்றனர்….

மேலும்...

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!

சென்னை (18 ஆக 2020): தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்குப் பருவக்காற்றின் காரணமாக வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய ஒடிசா, மேற்கு வங்கக் கடலோரப் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இதன் காரணமாகத் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில்…

மேலும்...

அதிமுக முன்னாள் எம்.பி. திமுகவில் இணைந்தார்!

சென்னை (18 ஆக 2020): அதிமுக முன்னாள் எம்.பி லட்சுமணன் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த லட்சுமணன், “தமிழகத்தின் நலனையும் உரிமையையும் பாதுகாத்துக்கொண்டிருக்கிற கட்சி திமுக. ஆளுமைமிக்க தலைமையின் கீழ் பணியாற்றவே திமுகவில் இணைந்துள்ளேன். தமிழகத்தில் வலுவான அரசு அமைய வேண்டிய தேவை இருக்கிறது. இளைஞரணி செயலளார் உதயநிதிக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார். மேலும் “கொரோனா காலத்தில் கூட அதிமுகவில்…

மேலும்...
Vinayagar Chathurthi

விநாயகர் சதூர்த்தியை நடத்த உத்தரவிடக் கோரி மனு – அபராதம் விதிக்கப்போவதாக நீதிமன்றம் உத்தரவு!

மதுரை (18 ஆக 2020): கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி வீதிகளில் கொண்டாட தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் பிரதான இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவி கொண்டாடக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அவரவர் வீட்டில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு நடத்தலாம் என்றும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை ரத்து செய்து உரிய வழிகாட்டுதல்களின்படி விநாயகர் சதுர்த்தியை கொண்டாட அனுமதிப்பது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ராஜபாளையம் தர்மாபுரத்தில் உள்ள மாப்பிள்ளை விநாயகர் கோவிலில் சிலை…

மேலும்...

எஸ்.பி பாலசுப்ரமணியன் தற்போதய நிலை என்ன? -எஸ்.பி.பி.சரண் தகவல்!

சென்னை (18 ஆக 2020): கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் எஸ்பி பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவருக்கு இரு தினங்களுக்கு முன்பு உடல் நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவரது உடல் நிலை குறித்து அவரது மகன் வெளியிட்டுள்ள தகவலில், “அப்பா நேற்று எந்த நிலையில் இருந்தாரோ அப்படித்தான் இருக்கிறார். தீவிர சிகிச்சையில் இருந்தாலும் சீராக இருக்கிறார். வேறெந்த சிக்கல்களும் இல்லை. இது நல்ல…

மேலும்...

தமிழக அமைச்சரவையை உடனடியாக கூட்ட வேண்டும் – ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை!

சென்னை (18 ஆக 2020): ஸ்டெர்லைட் வழக்கில் மக்களுக்கு சாதகமான தீர்ப்பு வந்துள்ள நிலையில், முழுத் தீர்ப்பினையும் அமைச்சரவை முன்பு வைத்து தீர்ப்பை வரவேற்று ஒரு அமைச்சரவைத் தீர்மானமாகவே வெளியிட வேண்டும்” என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது” என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்துள்ள மகத்தான- மனிதகுலத்தினைக் காப்பாற்றிடும் தீர்ப்பாகும். சுற்றுப்புறச்சூழலுக்கும் – தங்களின்…

மேலும்...

போலீஸ் வன்முறையால் 83 வயது முதியவர் படுகாயம் – கண்பார்வை இழப்பு!

சேலம் (18 ஆக 2020): சேலத்தில், விசாரணை என்ற பெயரில் லட்டியால் கண்மூடித்தனமாக தாக்கியதில், 83 வயது முதியவரின் கை முறிந்துள்ளது மேலும் அவருடைய மகனுக்கு கண்பார்வை பாதிக்கப்பட்டுள்ளது,. சேலம் மாவட்டம் உத்தமசோழபுரம் அருகே உள்ள அரியாம்பாளையத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி (83). இவருடைய மகன் ராஜூ (53). இவர்களுக்கு அதே பகுதியில் 2.60 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் அனுபவ பாத்தியதையில் இருந்து வருகிறது. இவர்களது நிலம் அருகே, உத்தமசோழபுரம் ஊராட்சி…

மேலும்...

டாஸ்மாக்கில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் மீது இல்லை – மக்கள் நீதி மய்யம்!

சென்னை (18 ஆக 2020): டாஸ்மாக்கில் காட்டும் ஆர்வம் பொதுமக்கள் மீது இல்லை என்று மக்கள் நீதிமய்யம் தொழிலாளர் அணி தெரிவித்துள்ளது, இதுகுறித்து அதன் மாநில செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவிட்-19 நோய் தொற்று காரணமான ஊரடங்கு ஐந்தாவது மாதத்தை கடந்து செல்லவிருக்கும் சூழலில் மக்களின் இயல்பு வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் மீட்டெடுக்கும் எண்ணம் தமிழக அரசுக்கு கிஞ்சித்தும் இருப்பதாக தெரியவில்லை. ஏனெனில் கடந்த ஐந்து மாதங்களாக குண்டூசி தயாரிக்கும் தொழிற்சாலைகள் தொடங்கி விமானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்…

மேலும்...