டாஸ்மாக்குக்கும் கொரோனாவுக்கும் தொடர்பு – ஸ்டாலின் கருத்து!

சென்னை (17 ஆக 2020): தமிழகத்தில் கொரோனா பரவலில் பெறும்பங்கு டாஸ்மாக்குக்கு இருப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், “சென்னை தவிர பிற மாவட்டங்களில் #Covid19 பரவியதில் #TASMAC-க்கு பெரும்பங்குண்டு எனத் தெரிந்தும், சென்னையிலும் திறப்பது பெரும் தவறு. யார் பாதிக்கப்பட்டாலும், வருமானம் வந்தால் சரி என நினைப்பது மனிதாபிமானமற்ற செயல்! ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் வேண்டாம். வைரசை மேலும்…

மேலும்...

இறப்பு விகிதத்தைப் பார்த்து மக்கள் அச்சப்பட வேண்டாம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னை (17 ஆக 2020): இறப்பு எண்ணிக்கையப் பார்த்து பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது கூறியதாவது:- இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி கொரோனா இறப்பு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.அனைத்து உயிரிழப்புகளுக்கும் கொரோனா காரணம் இல்லை. கொரோனா நோயாளிகளில் 10 சதவீதம் பேர்…

மேலும்...

அதிமுகவினருக்கு எடப்பாடி, ஓபிஎஸ் எச்சரிக்கை

சென்னை (15 ஆக 2020): கட்சி நிர்வாகிகள் யாரும் தனியாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது என்று அதிமுக தலைமை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்னும் மகத்தான மக்கள் இயக்கத்தின் உடன்பிறப்புகள் அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள். இந்த இனிய நாள் நம் முன்னோர்களின்…

மேலும்...

ஓபிஎஸ்ஸின் கருத்தால் அதிமுகவில் சலசலப்பு!

சென்னை (15 ஆக 2020): துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இட்டுள்ள ட்விட்டர் பதிவால் அதிமுகவில் மீண்டும் புகைச்சல் ஆரம்பித்துள்ளது. 2021 சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ள நிலையில் அதிமுகவில் யார் முதல்வர் வேட்பாளர்? என்ற கேள்வி எழுந்துள்ளது,. ஆனால் இதுகுறித்து ஓ.பி.எஸ் ட்விட்டர் பதிவொன்றை இட்டுள்ளார் அதில், “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே!!” என்று அந்த ட்விட்டர் பதிவு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த ட்விட்டர்…

மேலும்...

தமிழக அரசு மீது எச்.ராஜா காட்டம்!

காரைக்குடி (14 ஆக 2020): விநாயகர் சதூர்த்தி விழாவிற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதற்கு எச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் மதுக்கடைகளில் சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். இதற்கு வாரத்தில் 6 நாட்கள் அனுமதி அளித்துள்ள அரசு, ஆண்டிற்கு 6 நாட்கள் மட்டுமே இந்துக்களால் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்துள்ளது. சமூக இடைவெளியுடன் சதுர்த்தி விழா கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த முடிவை உடனடியாக…

மேலும்...

இலங்கை எம்.பி. ரவூஃப் ஹக்கீம் வெற்றிக்கு காதர் மொகிதீன் வாழ்த்து!

திருச்சி (13 ஆக 2020): இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூஃப் ஹக்கீம் எம்.பி. வெற்றிக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து காதர் மொய்தீன் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது : “நடைபெற்று முடிந்துள்ள இலங்கை பொதுத் தேர்தலில் தாங்கள் கண்டி மாவட்ட தொகுதியிலிருந்து மக்கள் பிரதிநிதியாக சிறப்பான வெற்றி பெற்றமைக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள். இத்தேர்தலில் ஜனநாயக மக்கள் சக்தி என்ற…

மேலும்...
Vinayagar Chathurthi

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்குத் தடை! தமிழக அரசு அதிரடி!

சென்னை (13 ஆக 2020):இவ்வருட விநாயகர் சதுர்த்தி விழாவை மக்கள் தத்தமது வீடுகளிலேயே கொண்டாடிக் கொள்ளுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. பொது இடங்களில் இதனை விழாவாகக் கொண்டாட தடை விதித்து தமிழக அரசு அறிவித்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.அதில், விநாயகர் சிலைகளைப் பொது இடங்களில் வைப்பது, அதற்காக விழா எடுப்பது மற்றும் கடலில் கரைக்கும் வைபவம் ஆகிய அனைத்து நடைமுறைகளுக்கும் தடை விதித்துள்ளது. கொரோனா நெருக்கடி நிலைமையைக் கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மேலும் விநாயகர்…

மேலும்...

அதிமுக பாஜக இடையே குடுமிப்பிடி சண்டை – நயினார் போகுமிடம் எங்கே?

சென்னை (12 ஆக 2020): சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கிவிட்டன., பலர் தங்களது கட்சிகளிலிருந்து அடுத்த கட்சிகளுக்கு தாவ தொடங்கிவிட்டனர். அதில் குறிப்பாக அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு பாய்ந்த நயினார் நாகேந்திரன்தான் இப்போது டைம் லைனில் உள்ளார். இவர் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு நவாஸ் கனியிடம் தோல்வியை சந்தித்தார். மேலும் தமிழக பாஜக தலைவர் பதவியை எதிர் பார்த்து காய் நகர்த்திய நயினாருக்கு அது…

மேலும்...

கொரோனாவின் கோர முகம் – மகனும் தாயும் மரணம்!

கடலூர் (12 ஆக 2020): கொரோனா பாதிப்பால் மகன் இறந்த அதிர்ச்சி காரணமாக தாயும் இறந்த சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் டானா கார தெருவில் வசித்து வரும் கலியமூர்த்தி – மீனாட்சி தம்பதிகள். இவர்களின் மகன் சூரியகுமார். வயது 50. இவருக்கு கலா (வயது 45) என்ற மனைவியும், இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். இவர் காட்டுமன்னார்கோவில் செட்டியார் ரோட்டில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராகப்…

மேலும்...
Jacinda Ardern

நியூசிலாந்தில் மூன்றரை மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாக கொரோனா பாதிப்பு!

ஆக்லாந்து  (11ஆக 2020):உலகளவில் இதுவரை 2,02,80,518 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 7,39,761 பேர் உயிரிழந்துள்ளனர். சரிவில்லா பொருளாதாரம் மிக நேர்தியும் வலுவும் மிக்கதொரு சுகாதார கட்டமைப்பு, நேர்மையான ஆட்சிமுறை உள்ள நாடுகள் கூட கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன. எனினும் மற்ற நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகக் காட்டப்படும் நியூசிலாந்து நாடு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மற்ற நாடுகளில் இருந்து நியூசிலாந்து வருவோர் ஒவ்வொருவரும் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு முறையாக கண்காணிக்கப்படுகின்றனர். அதனால்…

மேலும்...