இப்போ ஏன் அங்கே போறாரு – கமல் மீது அதிருப்தியில் மநீம!

சென்னை (30 ஆக 2020): கமல் ஹாசன் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தொகுப்பாளராக செல்வது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. திமுகவுக்கு ஐ-பேக்கும், அதிமுகவுக்கு சுனில் அன் கோவும் உள்ளது போல் கமல்ஹாசன் கட்சிக்கு சங்கையா சொல்யூசன்ஸ் என்ற தேர்தல் வியூக குழு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தேர்தல் வேலைகளில் கவனம் செலுத்தாமல் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க செல்வதால் சங்கையா சொல்யூசன்ஸ் மற்றும்…

மேலும்...

இளம் பெண்ணை கர்ப்பமாக்கி சீரழித்த உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு!

மயிலாடுதுறை (30 ஆக 2020): இளம்பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம்பலத்தை சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். 29 வயதான இவர் சப் இன்ஸ்பெக்டராக 2017 ஆம் ஆண்டு மணல்மேடு காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, அப்பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற தனியார் நிறுவனத்தில் பனியாற்றிவந்த இளம்பெண் ஒருவருடன் முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு இருவரும் பழகினர். பிறகு…

மேலும்...

கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் – வசந்தகுமார் இறந்தது எதனால்?

சென்னை (29 ஆக 2020) காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வசந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , “சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அப்பா 6.56-க்கு இயற்கை எய்தினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பா மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்‌ஷன்…

மேலும்...

அடுத்த நடவடிக்கை என்ன? – மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

சென்னை (29 ஆக 2020): புதிய தளர்வுகள் மேற்கொள்வது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க கடந்த மார்ச் 25-ந் தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு படிப்படியாக தளர்வுகளை அனுமதித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் தொடர்ந்து பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே இ-பாஸ் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்படி மாநில…

மேலும்...

காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் மரணம்!

சென்னை (28 ஆக 2020): கொரோனா பாதித்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் சென்னையில் உயிரிழந்தார். கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நங்குநேரி வசந்தகுமார் எம்.பி. கடந்த 10 ஆம் தேதி, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஆகஸ்ட் 28 ) உயிரிழந்தார். காங்கிரஸ்…

மேலும்...

எஸ்.வி.சேகரை தப்பிக்க வைக்க இன்னொரு வழிமுறையை சொன்ன போலீஸ்!

சென்னை (28 ஆக 2020): தேசியக்கொடியை அவமதிக்கும் வகையில் பேசிய எஸ்.வி சேகர் மன்னிப்பு கேட்டால் கைதிலிருந்து தப்பிக்கலாம் என்று போலீஸ் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார். அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர்,…

மேலும்...

தமிழக அமைச்சரின் மனைவி மரணம்!

சென்னை (28 ஆக 2020): தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மனைவி கலைச் செல்வி சென்னையில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இன்று சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். அவரது உடலை அமைச்சரின் சொந்த ஊருக்குச் சென்று இரவு இறுதி சடங்கு நடத்தப்படவுள்ளது.

மேலும்...

பிரபல நடிகர் தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம் – விஷம் வைத்து கொன்றதாக நடிகை மீது வழக்கு!

மும்பை (27 ஆக 2020): நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தை விஷம் வைத்து கொலை செய்ததாக அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்திக்கு எதிராக போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பண மோசடி விசாரணைக்காக கைப்பற்றப்பட்ட ரியா சக்ரபோர்த்தியின் மொபைலில் காணப்பட்ட வாட்ஸ்அப் தகவல்களின் பதினைந்து பக்கங்கள் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த ஒரு குழு மும்பைக்கு சென்று நடத்திய விசாரணையின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ரியா…

மேலும்...

தமிழகத்தில் நீட் தேர்வு எப்போது நடத்தலாம்? – முதல்வர் தகவல்!

சென்னை (27 ஆக 2020): கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு நீட் தேர்வை நடத்தலாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கடலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உபகரணங்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. கொரோனா தொற்றுக்கு ஆளாகும் நபர்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாதபோதும்…

மேலும்...

வீணில் தகரம் அடித்து அடைத்தவர்களுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

சென்னை (27 ஆக 2020): கொரோனாவிலிருந்து மீண்டவர் வீட்டில் தகரம் வைத்து அடைத்த அதிகாரிகளுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுபியுள்ளது. சென்னையை குரோம்பேட்டை அஸ்தினாபுரம் புருஷோத்தமன் நகரில் உள்ள தனியார் அடுக்கு மாடி குடியிப்பில் வசிக்‍கும் 50 வயது நபருக்‍கு கடந்த 14 நாட்கள் முன்பு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார். இந் நிலையில் பல்லாவரம் நகராட்சி ஊழியர்கள், அவரது வீட்டின் கதவு…

மேலும்...