இளம் பெண்ணை கர்ப்பமாக்கி சீரழித்த உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு!

Share this News:

மயிலாடுதுறை (30 ஆக 2020): இளம்பெண் ஒருவரை காதலித்து ஏமாற்றிய சப் இன்ஸ்பெக்டர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஓரடியம்பலத்தை சேர்ந்தவர் விவேக் ரவிராஜ். 29 வயதான இவர் சப் இன்ஸ்பெக்டராக 2017 ஆம் ஆண்டு மணல்மேடு காவல்நிலையத்தில் பணியாற்றிய போது, அப்பகுதியை சேர்ந்த சுபஸ்ரீ என்கிற தனியார் நிறுவனத்தில் பனியாற்றிவந்த இளம்பெண் ஒருவருடன் முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்திக்கொண்டு இருவரும் பழகினர். பிறகு நட்பு காதலாக மாறி உல்லாசமாக பல இடங்களிலும் சுற்றியுள்ளனர்.

ஒரு கட்டத்தில் மணல்மேடு கல்லூரிக்கு எதிரே உள்ள ஒரு வீட்டில் இருவரும் கணவன் மனைவியைபோல இருந்துள்ளனர். அதில் சுபஸ்ரீ கர்ப்பமானார். இதை கேட்ட உதவி ஆய்வாளர் விவேக் ரவிராஜ், கருவை கலைத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன் என கருவை கலைக்கச்சொல்லி கட்டாயப் படுத்தியிருக்கிறார்.

இதற்கு சுபஸ்ரீ உடன்படாததால் ஆத்திரமான விவேக் ரவிராஜ் முதலில் தனது நண்பர்கள், பிறகு அதிமுக அமைச்சர் ஒருவர்மூலம் அதிமுககாரர்கள் என பலர் மூலம் முயற்சித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது தாயார் ராஜாத்தியும் “நீ கருவை கலைத்தால் தான் தனது மகனை திருமணம் செய்துகொள்ள சொல்லுவேன், என கட்டாயப்படுத்தியதால் அவரது பேச்சை நம்பி கருவை கலைத்துள்ளார். சுபஷீ தனது கருவை கலைத்த பிறகு விவேக் அவரிடம் பேசுவதைவிட தவிர்த்துவிட்டார். அதோடு திருமணம் செய்து கொள்வதாகவும் மறுத்துவிட்டார்.

சுபஷீ தன்னை திருமணம் செய்து கொள்ள சொல்லி கேட்டபோதெல்லாம் கொடூரமான முறையில் மிரட்டிதிட்டியிருக்கிறார். மதுக்கூர் காவல் நிலையத்திற்கு பணிமாற்றமாக சென்ற போது அங்கேயும் சென்று கேட்டதற்கு, அங்கேயே திட்டி அடித்து சித்தரவதை செய்துள்ளார் விவேக் ரவிராஜ்.

தனக்கு நடந்த அனைத்து கொடுமையையும் ஆதாரமாக திரட்டிய அந்த இளம்பெண், விவேக் ரவிராஜ் தன்னிடம் ஆசையோடு பேசிய ஆடியோ, வீடியோ கசந்தபோது மிரட்டிய ஆடியோ, புகைப்படம் என எல்லாவற்றையும் ஆதாரத்தோடு சிடியாக சேர்த்து மயிலாடுதுறை டிஎஸ்பி, நாகை எஸ்பி, தஞ்சை சரக டிஐஜி, முதல்வரின் தனிப்பிரிவு என அனைவரிடமும் புகார் கொடுத்தார். அதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மயிலாடுதுறை நீதிமன்றத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

அதன்படி புகாரை பெற்ற அனைத்து மகளிர் ஆய்வாளர் கோப்பெருந்தேவி, தற்போது வலிவலம் காவல்நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் விவேக்ரவிராஜ் அவரது தாயார் ராஜாத்தி மீது ஏமாற்றுதல் கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Share this News:

Leave a Reply