கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் – வசந்தகுமார் இறந்தது எதனால்?

Share this News:

சென்னை (29 ஆக 2020) காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் கொரோனா ரிசல்ட் நெகட்டிவ் என வந்தும் அவரை காப்பாற்ற முடியவில்லை என்று அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வசந்த் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் , “சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அப்பா 6.56-க்கு இயற்கை எய்தினார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அப்பா மிகவும் கவலைக்கிடமாக இருந்தார். திடீரென ஆக்சிஜன் அளவு குறைந்ததால் வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கொரோனாவிலிருந்து மீண்டு மூச்சுவிட ஆரம்பிக்கும்போது பாக்டீரியா இன்பெக்‌ஷன் ஆனது. இதனால் மீண்டும் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது.

கடந்த 2 நாட்களாக எவ்வளவோ மருத்துவர்கள் போராடியும் அப்பாவை காப்பாற்ற முடியவில்லை. அப்பா நலம்பெறவேண்டும் என பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி, அப்பாவிற்கு இரண்டாவது முறை எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்தது. கொரோனாவால் அப்பா இறக்கவில்லை எனக் கூறினார்.

கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்னர்தான் வசந்தகுமார் உடல் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டு முகம் மட்டுமே தெரியும் அளவிற்கு கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு தி. நகர் நடேசன் தெருவில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. வசந்தகுமார் உடலுக்கு பொதுமக்களும், உறவினர்களும், வசந்த் அன் கோ ஊழியர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply