காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் மரணம்!

Share this News:

சென்னை (28 ஆக 2020): கொரோனா பாதித்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் சென்னையில் உயிரிழந்தார்.

கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்த நங்குநேரி வசந்தகுமார் எம்.பி. கடந்த 10 ஆம் தேதி, சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து சிகிச்சை பலனின்றி அவர் இன்று (ஆகஸ்ட் 28 ) உயிரிழந்தார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், செய்தித் தொடர்பாளர் குஷ்பூ உள்ளிட்டோர் வசந்த குமாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேலும் வசந்தகுமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி, அமைச்சர் ஜெயக்குமார், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக எம்.பி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply