அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் – வேல்முருகன் கோரிக்கை!

சென்னை (12 ஜூலை 2020): இடஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை என்றால் அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இது கொரோனா கோலோச்சும் காலம். கொரோனாவுக்கு மருந்தில்லை. தடுப்பூசிதான் நிலையான தீர்வு. அதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா போன்றதொரு வைரஸ்தான் கிரீமிலேயரும். இதற்கு முன் இல்லாத கொரோனா வைரஸை சீனா கண்டுபிடித்தது. அதைப் போலத்தான், அரசமைப்புச் சட்டத்திலேயே இல்லாத கிரீமிலேயரை இந்திய உச்ச…

மேலும்...

தங்க கடத்தல் – ஸ்வப்னா சுரேஷ் கைது!

திருவனந்தபுரம் (19 ஜூலை 2020): 30 கிலோ தங்க கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதரக முகவரியை தவறாக பயன்படுத்தி 30 கிலோ தங்கத்தினை கடத்த நடந்த முயற்சியை கேரள சுங்கத்துறையினர் 30.6.2020 கண்டறிந்து முறியடித்தனர் இது சம்பந்தமாக சரித் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்தபோது, தூதரகத்தில் ஏற்கெனவே பணியாற்றியவரும், கேரள தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியில் வேலை செய்த ஸ்வப்னா சுரேஷ் என்பவருக்கும்…

மேலும்...

திமுக எம்.எல்.ஏ திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம்!

செங்கல்பட்டு (12 ஜூலை 2020): திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரான திமுகவைச் சேர்ந்த இதயவர்மனுக்கும், திருப்போரூர் நகரில் செங்கேணி அம்மன் பகுதியில் வசிக்கும் குமாருக்கும் தகராறு இருந்துள்ளது. குமார் அந்தப் பகுதியில் சுமார் 15 ஏக்கர் சுற்றளவுக்கு பிளாட் போட்டு ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில் குமாரின் பிளாட்டிற்கு செல்ல பொது வழி பாதை சற்று…

மேலும்...

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தக விநியோகம்!

சென்னை (11 ஜூலை 2020): அரசுப் பள்ளிகளில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் 15ம் தேதி முதல் புத்தகங்கள் விநியோகிக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது, மேலும் சமூக விலகலை பின்பற்றி புத்தகம் வழங்கவும் பள்ளி கல்வித்துறை அந்த அறிவிபில் கூறியுள்ளது.. 12ம் வகுப்பு மாணவர்கள் அரசு வழங்கிய இலவச மடிக்கணினியை எடுத்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்விக்கான பிரத்யேக மென்பொருளை மடிக்கணினியில் பதிவிறக்கம் செய்து தர ஏற்பாடு செய்யப்படும் மென்பொருள் பதிவேற்றத்திற்கு…

மேலும்...

ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லீம்களை விடுதலை செய்யக்கோரி தமுமுக முற்றுகை போராட்டம் அறிவிப்பு!

சென்னை (11 ஜூலை 2020): வெளிநாட்டில் இருந்து ஆன்மீக சுற்றுலா வந்த முஸ்லிம்களை விடுவிக்க கோரி 14.7.2020 அன்று போராட்டம் நடத்த இருப்பதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜவாஹிருல்லாஹ் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 12 பெண்கள் உள்ளிட்ட 129 முஸ்லிம்களை தமிழக அரசு கைது செய்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கைது செய்யப்பட்ட இவர்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு புழல்…

மேலும்...

ரிலாக்ஸ் ஆகும் சென்னை – டென்ஷன் ஆகும் மதுரை!

சென்னை (10 ஜூலை 2020): தமிழகத்திலேயே சென்னையில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து கொண்டிருந்தாலும் மதுரையில் கிடுகிடுவென அதிகரித்துக் கொண்டுள்ளது. சென்னையில் தினமும் 2,000-க்கும் அதிகமாக தொற்று பாதிப்பு ஏற்பட்டு வந்த நிலையில், தற்போது அது 1,200 வாக்கில் உள்ளது. அதே நேரத்தில் தென் தமிழகத்தின் முக்கிய நகரமான மதுரையில் கடந்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு ஐந்து மடங்கு வரை அதிகரித்துள்ளது. மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம்…

மேலும்...

அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு – அரசியல் புள்ளிகளை பீதியில் ஆக்கும் கொரோனா!

சென்னை (10 ஜூலை 2020): தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை, 5 மடங்காக அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. அதாவது ஜூன் 23 ஆம் தேதி மதுரையில் 988 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது அங்கு 5,299…

மேலும்...

முஸ்லிம்கள் விஷயத்தில் தமிழக அரசுக்கு வைகோ கண்டனம்

முஸ்லிம்கள் விஷயத்தில் அரசு விதி மீறலில் ஈடுபட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளிலிருந்து வந்த முஸ்லிம்கள் விஷயத்தில் பல விதிமீறல்கள் நடைபெற்றுள்ளதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழக அரசு மீது குற்றம் சாட்டி உள்ளார். சென்னை புழல் சிறையில் இருக்கும் 129 வெளிநாட்டு முஸ்லிம்கள் மீதான வழக்கை முடித்து வைத்து, அவர்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக,அவர் 09.07.2020 அன்று வெளியிட்டுள்ள…

மேலும்...

சிபிஎஸ்இ பாடங்கள் நீக்கம் – கொரோனா காரணம்..?

புதுடெல்லி (09 ஜூலை 2020): ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பிற்கான 2020-2021 ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தினை மூன்றில் ஒரு பகுதியாக குறைப்பதாக 7.7.2020 அன்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. கொரோனாவைரஸ் காரணமாக தற்போது நிலவும் அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. ஜனநாயக உரிமைகள், உணவு பாதுகாப்பு, குடியுரிமை, மதச்சார்பின்மை போன்ற முக்கியமான பாடங்கள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து கொவிட்-19 காரணம் காட்டி நீக்கப்பட்டுள்ளது. பதினொன்றாம் வகுப்புக்கான அரசியல் அறிவியல் பாடத்தில் இருந்து…

மேலும்...

அமைச்சருக்கு கொரோனா – அதிர்ச்சியில் அதிமுக!

சென்னை (08 ஜூலை 2020): தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா தொற்றால் மக்கள் பிரதிநிதிகளும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அமைச்சர் தங்கமணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கல் தெரிவிக்கின்றன. மேலும் அவரது உடல் நிலை சீராக இருப்பதாக முதல் கட்ட…

மேலும்...