பிரபல எழுத்தாளருக்கு கொரோனா தொற்று!

சென்னை (16 ஜூலை 2020): தமிழகத்தில் கொரோனா-வின் கோரத் தாண்டவம் இன்னும் தொடர்கின்றது. இன்று மட்டும் 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த மூன்று நாட்களாக கொரோனா தொற்று 4 ஆயிரத்தைக் கடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரபல கவிஞரும் எழுத்தாளருமான மனுஷ்யபுத்திரன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. அவர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

மரணம் பற்றி தெரிய மரணித்துதான் பார்க்க வேண்டுமா? – முதல்வர் மீது கமல் கட்சி செயலர் காட்டம்!

சென்னை (16 ஜூலை 2020): நம்மவர் மீது விழுந்து பிராண்டி உங்கள் இயலாமையை தீர்த்துக் கொள்ள முயலாதீர்கள்” என்று எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் நீதி மய்யம் மாநில செயலாளர் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்த அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: “சேலத்தில் செய்தியாளர்களிடம் ‘கொரோனா பற்றி கமலுக்கு ஒன்றும் தெரியாது’ என தெரிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்களே… ஒருவருக்கு மரணத்தின் வலி தெரிய வேண்டுமென்றால் மரணித்துப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது போல கொரோனா நோய் தொற்று…

மேலும்...

அமைச்சர் நிலோபர் கபீலுக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை (16 ஜூலை 2020): தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் கிரின்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளார். ஏற்கனவே அமைச்சர் நிலோபர் கபிலின் மகன் மற்றும் மருமகனுக்கு தொற்று உறுதியான நிலையில் அமைச்சருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன்,…

மேலும்...

தடையை மீறி ஆண்டாள் கோவிலில் குவிந்த பக்தர்களால் பரபரப்பு!

விருதுநகர் (16 ஜுலை 2020): ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தடையை மீறி பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் திருவிழா நடத்தப் படுவது வழக்கம். கொரோனா பரவலால் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை எனவும், தேரோட்டக் காட்சிகள் யூ – டியூப் வலைதளத்தில் வெளியிடப்படும் எனவும் கோவில் நிர்வாகம் அறிவித்து இருந்தது. எனினும், கொடியேற்றத்தை முன்னிட்டு சில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் ஆண்டாள் ரெங்கமன்னாருக்கு அதிகாலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர்…

மேலும்...

தமிழகத்தில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம்: ஸ்டாலின் கிண்டல்

சென்னை (16 ஜூலை 2020):தமிழகத்தில் நோட்டாவைத் தாண்டுவதைக் கூட பா.ஜ.க. மறந்துவிடலாம் என்ற திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக புதனன்று அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இராணுவ உடையில் திருக்குறளை மேற்கோள் காட்டும் பிரதமர், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ‘இராணுவத்தில் தமிழர்கள் பங்கு’ என்ற பாடத்தை நீக்குகிறார். வெறும் பேச்சு மட்டும்தானா? தமிழர் நேசிக்கும் சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சி.,யின் எல்லைப் போராட்டம் ஆகிய பாடங்களை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க மறுத்தால் தமிழ் மண்ணில் நோட்டாவைத்…

மேலும்...

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி – காதர்மொய்தீன் அறிக்கை!

சென்னை (15 ஜூலை 2020): ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் தற்போது ஹஜ் இல்லத்தில் தங்க வைக்க உத்தரவிட்டமைக்காக தமிழக முதல்வருக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் நன்றியினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து (15.07.2020 புதன்கிழமை) அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழகத்திற்கு ஆன்மீகச் சுற்றுலா வந்திருந்த இந்தோனேஷியா, மலேசியா, பங்களாதேஷ், பிரான்ஸ், தாய்லாந்து உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 129 முஸ்லிம் சுற்றுலா பயணிகளை தமிழக அரசு கைது…

மேலும்...

ரஜினிகாந்த் கட்சி எப்போது ? – தியாகராஜன் ஆரூடம்

சென்னை (15 ஜூலை 2020): நடிகர் ரஜினிகாந்த் நவம்பரில் கட்சி ஆரம்பிப்பார் என அவரது நண்பர் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் ரஜினி நற்பணி மன்றங்கள் பல கோடிக்கணக்கான உதவிகளை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஏற்கனவே கட்சி ஏப்ரலில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிபார் என செய்திகள் வெளியாகின. தற்போது நவம்பரில் கட்சி ஆரம்பிக்கப்படும் என கராத்தே தியாகராஜன் தெரிவித்தாலும் அது எந்த வருட நவம்பர் என அவர் குறிப்பிடவில்லை.

மேலும்...

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்பு கால அட்டவணை வெளியீடு!

சென்னை (15 ஜூலை 2020): அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்படும் பாடங்களில் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, காலை 6.00 மணிக்கு நீட், JEE போன்ற படிப்புகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பாட்டனி பாடம் நடத்தப்படவுள்ளது. அதேபோல 7.00 – 8.00 மணி வரை இயற்பியல் பாடமும் நடத்தப்படும் என கூறப்பட்டிருக்கின்றது. 8.00 – 8:30 மணி வரை 10ம் வகுப்பிற்கான தமிழ் பாடமும், 8:30 – 9.00 மணி வரை 10ம் வகுப்பு ஆங்கில…

மேலும்...

வன்முறையைத் தூண்டும் சங்பரிவார் அமைப்புகள் மீது நடவடிக்கை – பாப்புலர் ப்ரண்ட் கோரிக்கை

சென்னை (15 ஜூலை 2020): தமிழகத்தின் அமைதி மற்றும் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் தொடர்ந்து சமூக ஊடகங்களில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சமூக விரோதிகளையும், அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் சங்பரிவார் அமைப்புகளையும் அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக பாப்புலர் ப்ரண்ட் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு : சமீப காலங்களாக சமூக ஊடகங்களில் மத ரீதியான மோதல்களை உருவாக்கும் நோக்கோடு சில…

மேலும்...

ஆவின் பால் விலை உயர்வுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்!

சென்னை (14 ஜூலை 2020): “கொரோனா பேரிடரிலும் ஆவின் விற்பனை விலை உயர்வு சர்வாதிகார போக்காகும்.” என்று பால் முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கடந்த வாரம் ஆவின் நிறுவனம் சார்பில் 5வகையான பால் மற்றும் பால் பொருட்களை தமிழக முதல்வர் அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார். அதில் மோர், லஸ்ஸி மற்றும் 90நாட்கள் கெட்டுப் போகாத பால் ஏற்கனவே வணிக சந்தையில் விற்பனையில் உள்ளதென்றும், அதனை சிறு மாற்றங்களோடு புதிய பொருட்களாக…

மேலும்...