அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு கொரோனா பாதிப்பு – அரசியல் புள்ளிகளை பீதியில் ஆக்கும் கொரோனா!

Share this News:

சென்னை (10 ஜூலை 2020): தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதுரையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி முதல் ஜூலை 9 ஆம் தேதி வரை, 5 மடங்காக அதிகரித்துள்ளது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை. அதாவது ஜூன் 23 ஆம் தேதி மதுரையில் 988 ஆக்டிவ் கேஸ்கள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது அங்கு 5,299 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

இந்நிலையில், மதுரையை சொந்த ஊராக கொண்டவர் செல்லூர் ராஜூவுக்கும் கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. செல்லூர் ராஜூவை போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,

ஏற்கனவே அமைச்சர் கேபி அன்பழகன், அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளடு அதிமுகவினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.


Share this News: