கொரோனாவிலும் மருந்தில் தலைவிரித்தாடிய கொள்ளை!

ஐதராபாத் (14 ஜூலை 2020): அனுமதியின்றி கொரோனா மருந்துகள் மற்றும் கொரோனா சோதனை கிட்களை திருட்டுத்தனமாக விற்பனை செய்த 8 பேரை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர். கொரோனா காலத்தில் மருத்துவமனைகளில் மட்டுமே பயன்படுத்தும் வகையிலான சிறப்பு மருந்து,மாத்திரைகள், டெஸ்ட் கிட்டுகள் ஆகியவற்றை சட்டத்துக்குப் புறம்பான வகையில் கொள்ளை விலைக்கு விற்பனை செய்வதாக ஐதராபாத் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் நடத்திய ரகசிய விசாரணையில் ஊசி போடுவதற்கு பயன்படும் மருந்துகளை 35 ஆயிரம்…

மேலும்...

நேபாள பிரதமரின் தகவலால் வெடித்த அயோத்தி விவகாரம்!

காத்மாண்டு (14 ஜூலை 2020): இராமன் பிறந்த உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் இருக்கிறது; ராமர் ஒரு நேபாளி என நேபாள பிரதமர் ஷர்மா ஒளி பேசிய கருத்து தற்போது பற்றி எரிகிறது. அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருக்கிறது. நேபாளத்தின் பால்மீகி ஆசிரமம்,மேற்கு பிர்குன்ஜ், தோரி-யில் அமைந்திருப்பதுதான் உண்மையான அயோத்தியா என்று நேபாள பிரதமர் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில், நேபாள வெளியுறவுத்துற…

மேலும்...

கொரோனா கொடூரம் – தாயை வீதியில் தவிக்க விட்ட மகன்கள்!

திருச்சி (14 ஜூலை 2020): கொரோனா பாதிப்பு இருக்குமோ என்ற சந்தேகத்தால் பெற்ற தாயை வீதியில் வீதியில் தவிக்க விட்டுள்ளனர் இரண்டு மகன்கள். திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள சார்.பி.டி நகரைச் சேர்ந்தவர் குமார் என்பவரின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் திருச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்நிலையில் குமார் தன்னுடன் இருந்த தாயை வீட்டின் வெளியே தனியே விட்டுவிட்டு வீட்டைப் பூட்டிவிட்டு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. வீட்டின் வெளியே…

மேலும்...

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கை மாற்றியது சிபிஐ!

தூத்துக்குடி (14 ஜூலை 2020): சாத்தான் குளம் தந்தை – மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளது சி.பி.ஐ.. சாத்தான்குளம் தந்தை மகன் மரணத்தை சிபிசிஐடி காவல்துறை கொலை வழக்காக பதிவு செய்திருந்தது. வழக்‍கு விசாரணை சி.பி.ஐ.க்‍கு மாற்றப்பட்டுள்ள நிலையில், இவ்வழக்‍கை கொலை வழக்‍காக சி.பி.ஐ மாற்றியுள்ளது. மேலும் முதல் குற்றவாளியாக உதவி காவல் ஆய்வாளர் ரகு கணேஷ், 4-ம் குற்றவாளியாக ஆய்வாளர் ஸ்ரீதர் ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. கொலை மற்றும் தடயங்களை…

மேலும்...

சென்னையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் காவல் உதவி ஆய்வாளர் மரணம்!

சென்னை (14 ஜூலை 2020): சென்னையில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒரு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழந்தார். கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த காவல்துறையினர் இரவு, பகலாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த குருமூர்த்தி என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஏற்கனவே அத்துறையை சேர்ந்த மூன்று பேர்,…

மேலும்...

பாரசிடமால் மாத்திரை வாங்க மருத்துவர் சீட்டு அவசியமில்லை – தமிழக அரசு தகவல்!

சென்னை (14 ஜூலை 2020): பாரசிடமால் மாத்திரை வாங்க மருந்து சீட்டு அவசியமில்லை என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் பாரசிட்டமால் மாத்திரைகளை மருந்தகங்களில் வாங்க வேண்டுமானால் மருத்துவர்களிடம் இருந்து மருந்து சீட்டு வாங்கி இருக்க வேண்டும் என்றும் மருந்து சீட்டு இல்லாதவர்களுக்கு பாரசிட்டமால் மாத்திரைகள் வழங்கப்படாது எனவும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. கொரோனா வைரசுக்கு காய்ச்சல், இருமல், ஜலதோஷம் உள்ளிட்டவை முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இதனால் சாதாரண காய்ச்சலும்…

மேலும்...

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை (14 ஜூலை 2020): முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் முடிவுகள் வெளியாகியுள்ளன. முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் 13.07.2020 இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனை முடிவில் முதலமைச்சருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் பணிபுரியும் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும்...

ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் ஹஜ் இல்லத்திற்கு மாற்றம்!

சென்னை (14 ஜூலை 2020): ஆன்மீக சுற்றுலா வந்து சிறையிலடைக்கப்பட்டவர்கள் ஹஜ் இல்லத்திற்கு மாற்றம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆன்மீக சுற்றுலாவிற்காக தமிழகம் வந்திருந்த 129 வெளிநாட்டு முஸ்லிம்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களை சிறையில் இருந்து வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பல்வேறு கட்சிகள் அரசிடம் கோரிக்கை வைத்திருந்தன. இதனையடுத்து வெளி நாடு முஸ்லிம்களை சிறையிலிருந்து தமிழக ஹஜ் இல்லத்திற்கு மாற்றுவதாக முதல்வர் பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார். இவர்களை வேறு இடத்திற்கு மாற்றக்…

மேலும்...

தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை!

சென்னை (13 ஜூலை 2020): தமிழகத்தில் வரும் ஜூலை 31 வரை பொது போக்குவரத்துக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது. இன்றைய நிலவரம் வரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,38,470 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா காரணமாக இறப்பு எண்ணிக்கை 1,966 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசு பொது போக்குவரத்துக்கு ஜூலை 31 ஆம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…

மேலும்...

கொரோனா நிவாரணத்துக்கான மான்யங்கள் பெறுவதில் சங்க பரிவார என்.ஜி.ஓ.-க்களுக்கும் முன்னுரிமை!

புதுடெல்லி (13 ஜூலை 2020):கடந்த ஐந்து மாதங்களாக உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் கோவிட்19 கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் மிக வேகமாகப் பரவி உக்கிரத்தைக் காட்டி வருகின்றது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பிலிருந்து வெளிவர அந்ததந்த மாநிலங்களில் குறிப்பிட்ட தன்னார்வ அமைப்புக்களுடன் இணைந்து உள்துறைச் செயலரால் ஏற்படுத்தப்பட்ட அமைப்பின் மூலம் நிவாரணப் பணிகள் கடந்த ஏப்ரல் முதல் தேதி முதல் நடைபெற்று வருகின்றன. இந்த அமைப்பின் கீழ் வரும் என்.ஜி.ஓ.-க்கள் அனைவரும் உள்துறைச் செயலரால்…

மேலும்...