ஐபிஎஸ் போட்டியிலிருந்து சுரேஷ் ரெய்னா திடீர் நீக்கம்!

Share this News:

துபாய் (29 ஆக 2020): ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎஸ் கிரிக்கெட்டிலிருந்து சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

13வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக அனைத்து அணிவீரர்களும் பயிற்சிக்காக அமீரகத்தில் தற்போது முகாமிட்டுள்ளனர். அந்த வகையில் சென்னை அணியும் சமீபத்தில் அமீரகம் சென்றடைந்தது.

தொடருக்கான பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த சூழலில், சென்னை அணியைச் சேர்ந்த தீபக் சஹர், அணி ஊழியர்கள் உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகச் சென்னை அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், சுரேஷ் ரெய்னா துபாயிலிருந்து இந்தியா திரும்பினார் என சிஎஸ்கே தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.


Share this News:

Leave a Reply