சவூதி அரேபியா ரியாத்தில் நடந்த மாணவர்களுக்கான வினாடி வினா போட்டி!

ரியாத் (04 ஜன 2023): கடந்த 29 டிசம்பர் 2022 மாலை ரியாத் பத்ஹா ஜாமியா ஷம்ஸிய்யா பள்ளிவாசலில் மாணவர்களுக்கான விநாடி வினா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. மெளலவி நூஹ் அல்தாஃபி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் 35க்கும் அதிகமான மாணவர்கள் 7 முதல் 14 வயது வரை கலந்துகொண்டு ஆர்வமாகக் கலந்துகொண்டனர். மெளலவி அபுல்ஹசன், இக்பால் காசிம், ஷேக் அப்துல்லா, நிசார் அஹ்மது, பாபா அஸ்ஸாம், தன்வீர், AK உள்ளிட்டோர் நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பீகாரைச் சேர்ந்த…

மேலும்...

சவூதியில் பெய்துவரும் கனமழையால் 3 குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

ஜித்தா (04 ஜன 2023): சவூதி அரேபியாவில் பெய்து வரும் கனமழைக்கு மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை குன்ஃபுடாக்கின் வடக்கே அல்முதைலிஃப் என்ற இடத்தில் உள்ள முகபாப் கிராமத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் மூன்று குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உறவினர்களான 5 குழந்தைகள் நீர்நிலையில் விளையாடிக் கொண்டிருந்தபோது, ​​அவர்களில் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இரண்டு பேர் உயிர் தப்பினர். குழந்தைகளுக்கு 9 முதல் 12 வயதுவரை இருக்கும். உயிரிழந்த…

மேலும்...

ஒரே வேளைக்கு 18 பேர் உணவு சாப்பிட்ட தொகை ரூ.1 கோடியே 40 லட்சம்

துபாய் (03 ஜன 2023): ஐக்கிய அரபு எமிரேட்ஸில் புத்தாண்டு தினத்தன்று 18 பேர் கொண்ட ஒரு குழு உணவுக்காக 620,926.61 திர்ஹம்களை (இந்திய ரூபாயில் ரூ.1 கோடியே 40 லட்சம்) செலவழித்துள்ளது. இந்தத் தொகையை பில் செய்த உணவகத்தின் உரிமையாளர் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்துள்ளார். துபாயில் உள்ள Gall Restaurant, 18 விருந்தினர்களுக்கு இவ்வளவு பெரிய கட்டணத்திற்கான உணவை வழங்கியுள்ளது. உணவகத்தின் உரிமையாளர் மெர்ட் டர்க்மென் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பில்லின் படத்தை வெளியிட்டுள்ளார்….

மேலும்...

உலக கால்பந்து நாயகன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார்!

ரியாத் (03 ஜன 2023): – சவுதி கால்பந்து ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த தருணம் வந்துவிட்டது. உலக கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரியாத் வந்தடைந்தார். கிறிஸ்டியானோ அண்ணாஸ்ர் கிளப்பில் சேர்ந்துள்ள நிலையில் அவர் ரியாத் வந்துள்ளார். அவருடன் அவரது மனைவியும் வந்துள்ளார். ரியாத்தில் உள்ள அன்னாஸ்ர் கிளப்புடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட ரொனால்டோ, செவ்வாய்கிழமை ரசிகர்கள் முன்னிலையில் மஞ்சள் ஜெர்சியில் தோன்றுவார். வரும் வியாழன் அன்று ரொனால்டோவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என எதிர்…

மேலும்...

ஐக்கிய அரபு அமீரகத்தில் மஞ்சள் எச்சரிக்கை!

துபாய் (02 ஜன 2023): ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் இன்று பனிமூட்டம் ஏற்பட வாய்ப்புள்ளதால் தேசிய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அபுதாபி காவல்துறை, வாகன ஓட்டிகளை எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், பல்வேறு சாலைகளில் மங்களாக காணப்படும் என்பதால் வேக வரம்புகளில் மாற்றங்களைக் கவனிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் மலைப்பகுதிகளில் 8 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை குறைய வாய்ப்புள்ளது. அபுதாபியில் அதிகபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 18 டிகிரி…

மேலும்...

புனித மக்கா குறித்து பரவும் போலி வீடியோ!

ஜித்தா (02 ஜன 2023): மக்காவின் புனித ஹராமில் பனிப்பொழிவுடன் மழை பெய்யும் போலி வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கடந்த சில நாட்களாக சவூதி அரேபியாவில் மழை பெய்து வருகிறது. அதேவேளை இவ்வாறு பெய்து வரும் மழைக்கு வீடியோ எஃபெக்ட்ஸ் சேர்க்கப்பட்டு மக்காவையம் இணைத்து போலியாக பரப்பபட்டு வருகிறது, “பனி பொழிவது போல் வீடியோவில் உள்ளது அவ்வாறு எதுவும் இல்லை வீடியோ போலியானது” என்று தேசிய வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்…

மேலும்...

சவூதி அரேபியா ரியாத்தில் ஆடல் பாடலுடன் நடந்த புத்தாண்டு கொண்டாட்டம்!

ரியாத் (02 ஜன 2023): சவூதி அரேபியா ரியாத் நகரில் ஆடல், பாடல் மற்றும் வான வேடிக்கைகளின் வண்ணமயமான காட்சிகளுடன் ரியாத் நகரம் புத்தாண்டை வரவேற்றது. ரியாத்தின் பல்வேறு இடங்களில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற நிகழ்வுகளில் இளைஞர்கள் புத்தாண்டுக்கு பெரும் வரவேற்பு அளித்தனர். அரபு உலகின் முன்னணி பாடகர்களை ஒன்றிணைத்து, ரியாத் பவுல்வர்டில் நடைபெற்ற “ட்ரையோ நைட்” இசை நிகழ்ச்சியின் போது புத்தாண்டு கொண்டாடப் பட்டது.  இது சவூதி அரேபியாவின் மிக முக்கியமான புத்தாண்டு நிகழ்வாகவும் இருந்தது. ஜார்ஜ்…

மேலும்...

சவூதி அரேபியா ஜித்தாவில் பாதாள வழிகள் மூடல் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

ஜித்தா (02 ஜன 2023): சவூதி அரேபியா ஜித்தாவில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பல்வேறு பாதாள சாலைகள் மூடப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. பாலஸ்தீன சாலையில் இணையும் அமீர் மஜித் சுரங்கப்பாதை வடக்கிலும், அல்ஜாமியா சுரங்கப்பாதை இருபுறமும், கிங் அப்துல்லா சாலை மற்றும் மதீனா சாலையும், கிங் அப்துல்லா சாலை மற்றும் கிங் ஃபஹத் சாலையும் மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் இந்த பாதாள சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என்றும் மாற்று வழிகளை பயன்படுத்த…

மேலும்...

சவூதியில் கனமழை எச்சரிக்கையை அடுத்து கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை!

ஜித்தா(01 ஜன 2023)- சவூதியில் மழை தீவிரமடையும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு, நாளை (திங்கட்கிழமை) ஜித்தா, தாயிப் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கா, ஜுமூம், அல்காமில் மற்றும் பஹ்ரா ஆகிய பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படும் என மக்கா கல்வித்துறை முன்னதாக அறிவித்திருந்தது. நாளை பிற்பகல் 3 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மழை…

மேலும்...

சவூதியில் வெளிநாட்டவர்களின் இக்காமா புதுப்பித்தல் மற்றும் ரீ என்ட்ரி விசா கட்டணம் சில மாறுபாடுகள்!

ரியாத் (01 ஜன 2022): சவூதி அரேபியா அரசாங்கத்தின் இகாமா மற்றும் ரீ என்ட்ரி கட்டணம் தொடர்பான முடிவுகளில் வெளிநாட்டவர்களுக்கு சில மாறுபாடுகள் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்கு ரீ-என்ட்ரி விசா நீட்டிப்பு மற்றும் இகாமா புதுப்பித்தல் ஆகிய கட்டணங்கள் இரட்டிப்பாகும் என்பது புதிய தகவல் இதனை சவூதி அரேபிய முக்கிய ஊடகங்களான சவூதி கெசட், அல்மதீனா உள்ளிட்ட ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி வெளிநாட்டவர் சவுதி அரேபியாவில் இருந்தால், மறு நுழைவு கட்டணம் இரண்டு மாதங்களுக்கு 200 ரியால். ஒவ்வொரு…

மேலும்...