இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜித்தா (10 ஜன 2023): இந்தியா மற்றும் சவுதி அரேபியா இடையே இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து ஒன்றே முக்கால் லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.

இந்த ஆண்டுக்கான ஹஜ் ஒப்பந்தத்தில் இந்திய தூதரகம் முஹம்மது ஷாஹித் ஆலம் மற்றும் ஹஜ் மற்றும் உம்ராவுக்கான சவுதி அமைச்சர் டாக்டர் அப்துல்பத்தாஹ் சுலைன் ஆகியோர் கையெழுத்திட்டனர். ஜித்தா சுப்பர்டோமில் நடைபெற்ற ஹஜ் எக்ஸ்போவில் இந்த பேச்சுவார்த்தை கையெழுத்தானது.

இந்த ஒப்பந்தத்தின்படி இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1,75,025 யாத்ரீகர்கள் ஹஜ் பயணம் மேற்கொள்ள முடியும்.

2019 ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்து 2 லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் செய்ய வாய்ப்பு கிடைத்தது. 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கோவிட் பரவியதால் வெளிநாட்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு வாய்ப்பு இல்லை.

2022 ஆம் ஆண்டில், வெளிநாட்டு யாத்ரீகர்களுக்கு வாய்ப்பு கிடைத்தபோது, ​​இந்தியாவில் இருந்து 79,237 யாத்ரீகர்கள் ஹஜ்ஜுக்கு வந்தனர்.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply