மதீனாவில் மின்சார வாகன போக்குவரத்து சேவை தொடங்கியது!

மதீனா (09 ஜன 2023): மதீனாவில் 100 மின்சார வாகனங்களுடன் போக்குவரத்து சேவை தொடங்கியது.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் சுமார் 500 மின்சார வாகனங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என மதீனா முனிசிபல் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

குடியிருப்பாளர்கள் மற்றும் யாத்ரீகர்களின் போக்குவரத்து சேவைகளை அதிகரிப்பதன் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமைந்துள்ளது.

முதல் கட்டமாக மஸ்ஜித் நபவி, குபா மஸ்ஜித் மற்றும் சையிது ஷுஹாதா சதுக்கம் இடையே மின்சார வாகன சேவைகள் நடைபெறும்.

மஸ்ஜிதுந்நபவி பள்ளிவாசலுக்குச் செல்வதற்கும் வருவதற்கு இதன் பணியாளர்கள் முழுநேர வேலை செய்வார்கள்.

5 முதல் 7 பேர் வரை செல்லக்கூடிய சிறிய வாகனங்கள். மின்சார பேருந்துகள் மற்றும் 60 பயணிகள் செல்லக்கூடிய பெரிய வாகனங்கள் சாதாரண போக்குவரத்து என பல பிரிவுகள் இதில் செயல்படும்.

அடுத்த ஆறு மாதங்களுக்குள் சுமார் 500 வாகனங்களை இதன் சேவையில் ஈடுபடுத்துவதே நகராட்சியின் நோக்கமாகும். இது முதலீட்டு நிலைமைகளை உருவாக்கும் மற்றும் பிராந்தியத்தில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply