கைக் குழந்தையுடன் டாக்சியில் பயணித்த பெண் கூட்டு வன்புணர்வு – குழந்தை படுகொலை!

Share this News:

மும்பை (11 டிச 2022): மும்பையில் இளம்பெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் அவரது பத்து மாதப் பெண் குழந்தையும் படுகொலை செய்யப்பட்டுள்ளது.

மும்பையின் அகமதாபாத் நெடுஞ்சாலையில் மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தில் தனது கைக்குழந்தையுடன் ஒரு பெண் டாக்சியில் ஏறினார். அந்த டாக்சியில் ஏற்கனவே 4 பேர் இருந்துள்ளனர்.

சிறிது தூரம் சென்றபின்னர், டாக்ஸி டிரைவர் மற்றும் அதில் இருந்த 4 பேர் அந்த பெண்ணைக் கூட்டு வன்புணர்வு செய்துள்ளனர்.

அத்துடன் குழந்தையைத் தூக்கி எறிந்தும் கொலை செய்துள்ளனர். பின்பு அனைவரும் தப்பியோடி விட்டனர்.

இந்த கொடூர சம்பவம் தொடர்பாக கார் டிரைவர் மற்றும் அவருடன் இருந்த பயணிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தவறிழைத்தவர்கள் அனைவரும் விரைவில் கைது செய்யப் படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Share this News:

Leave a Reply