பாஜகவுடன் நிதிஷ் கூட்டணி முறிவு – பகீர் கிளப்பும் சிராக் பாஸ்வான்!

பாட்னா (02 நவ 2020): பா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விரைவில் விலகுவார் என்று லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார். பீகாரில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவருமான சிராக் பாஸ்வான், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் நேரத்துக்கு நேரம் தன் நிலையை மாற்றும் மனநிலை கொண்டவர்….

மேலும்...

காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே மோதல்!

ஸ்ரீநகர் (01 நவ 2020): ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே ஏற்பட்ட மோதலில் ஹிஜ்புல் முஜாஹிதின் பயங்கரவாத தலைவன் சுட்டுக் கொல்லப்பட்டதாக தேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஸ்ரீநகரில் உள்ள ரங்கிரெட்டி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது இந்த மோதல் நடந்துள்ளது. போலீசாரின் தேடலின் போது ஏ.கே .47 துப்பாக்கி மற்றும் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டன.சிஆர்பிஎஃப் மற்றும் காவல்துறை கூட்டாக இந்த தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து…

மேலும்...

காங்கிரஸுக்காக பிரச்சாரம் செய்த பாஜக பிரமுகர் ஜோதிராதித்யா சிந்தியா

போபால் (01 நவ 2020): பாஜக வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சென்ற பாஜகவை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா வாய் தவறி காங்கிரசுக்கு வாக்கு சேகரித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் 3 ம் தேதி மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கு பிரச்சாரம் மேற்கொண்ட சமீபத்தில் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த ஜோதிராதித்யா சிந்தியா, பாஜகவுக்கு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் தப்ராவில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தின் போது ஜோதிராதித்யா சிந்தியா பாஜக வேட்பாளர் இம்ராதி தேவிக்கு வாக்கு சேகரித்தார்….

மேலும்...

திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையதல்ல – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

லக்னோ (31 அக் 2020): திருமணத்திற்காக மதம் மாறுவது ஏற்புடையது அல்ல என்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்து ஆணை திருமணம் செய்துகொண்ட முஸ்லிம் பெண், திருமணத்திற்கு முன் இந்த ஆண்டு ஜூன் 29 அன்று இந்துவாக மதம் மாறினார். இவருக்கும் இந்து ஆணுக்கும் இடையிலான திருமணம் இந்து வழக்கப்படி ஜூலை 31 அன்று நடந்தது. இந்நிலையில் பாதுகாப்பு கேட்டு பெண் நீதிமன்றத்தை நாடினார். இதனை விசாரித்த திபதி மகேஷ் சந்திர திரிபாதி, மதமாற்றம் திருமணத்திற்காக மட்டுமே…

மேலும்...

பிகார் தேர்தல் பரபரப்பு – நான் வன்புணர்ந்து கொல்லப்படுவேன்: பிரபல நடிகை பகீர் தகவல்!

மும்பை (30 அக் 2020): பிகார் தேர்தல் பரபரப்பின் ஒரு பகுதியாக பிரபல பாலிவுட் நடிகை அமீமிஷா படேல் பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியில் நடிகை அமீஷா தெரிவித்துள்ளதாவது: லோக் ஜான்ஷக்தி வேட்பாளர் பிரகாஷ் சந்திராவுக்காக பிரச்சாரம் மேற்கொண்டபோது அவர் சார்பில் தனக்குச் சொல்லப்பட்டதை மட்டுமே சொல்லவும் செயல்படவும் நிர்பந்திக்கப்பட்டேன். ஒருவேளை அதனை மறுத்தால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட வாய்ப்புள்ளதாகவும் உணர்கிறேன். நான் மும்பை வந்து சேரும் வரை பாதுகாப்பற்ற…

மேலும்...

குஜராத் முன்னாள் முதல்வர் கொரோனா பாதிப்பால் மரணம்!

அஹமதாபாத் (29 அக் 2020): குஜராத் முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான கேசுபாய் படேல் கொரோனா பாதிப்பால் காலமானார். 92 வயதற்கான கேசுபாய் படேல், மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட படேல் வியாழக்கிழமை காலை இறந்தார். டைம்ஸ் ஆப் இந்தியா படி, படேலுக்கு செப்டம்பர் மாதம் கோவிட் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் அறிகுறிகள் எதுவும் இல்லை. படேல் இரண்டு முறை குஜராத்தின் முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...

பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்!

மும்பை (28 அக் 2020): இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த்த்தப்பட்ட வேண்டும் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். சிவசேனா ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் காலதாமதம்  கூடாது என வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் உறுதியான முடிவை எடுக்கும் என எதிர் பார்ப்பதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மேலும் ‘ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை சீனாவின் உதவியுடன் மீண்டும் செயல்படுத்த மெஹபூபா…

மேலும்...

மாடுகளை வெட்டுவோருக்கு சிறைதான் – யோகி ஆதித்யநாத் திட்டவட்டம்!

லக்னோ (28 அக் 2020): மாடுகளை வெட்டுவோர் சிறை செல்வதில் எந்தவித மாற்றமுமில்லை என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் பசுவதை சட்டம் தவறாக துஷ்பிரயோகம் செய்யப்படுவதை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்டித்திருந்தது. இந்நிலையில் உபியில் நவம்பர் 3 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலின் ஒரு பகுதியாக பிரச்சார பேரணியில் கலந்து கொண்டபோது யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்தார். முன்னதாக பசுவதை சட்டம் தொடர்பாக கைது செய்யப்பட ரஹீமுத்தின் வழக்கின் விசாரணையில் பசு…

மேலும்...

கல்லூரி வாசலில் மாணவி சுட்டுக் கொலை!

சண்டிகர் (27 அக் 2020): கல்லூரி வாசலில் வைத்து மாணவி சுட்டுக் கொலை செய்யப் பட்ட சமப்வம் அரியானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் நேற்று மதியம் கல்லூரிக்கு மாணவி ஒருவர் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்தார். அப்போது அங்கு காரில் வந்த இரண்டு இளைஞர்கள் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் பெண்களை வழிமறித்து அவர்களில் ஒரு பெண்ணை காரில் ஏற்ற முயற்சி செய்கின்றனர். சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பின்னர் அந்த இளைஞர் தான்…

மேலும்...

மத்திய அமைச்சருக்கு கொரோனா பாதிப்பு!

புதுடெல்லி (27 அக் 2020): மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், மத்திய இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். பாதிப்புகள் தீவிரமாக இல்லாதபோதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் பம்பாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ்…

மேலும்...