பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த சிவசேனா வலியுறுத்தல்!

Share this News:

மும்பை (28 அக் 2020): இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த்த்தப்பட்ட வேண்டும் என்று சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

சிவசேனா ஏற்கனவே பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் காலதாமதம்  கூடாது என வலியுறுத்தியிருந்தது. இந்நிலையில் மத்திய அரசு பொது சிவில் சட்டத்தை அமல் படுத்துவதில் உறுதியான முடிவை எடுக்கும் என எதிர் பார்ப்பதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் ‘ஜம்மு-காஷ்மீரில் 370 வது பிரிவை சீனாவின் உதவியுடன் மீண்டும் செயல்படுத்த மெஹபூபா முப்தி மற்றும் பாரூக் அப்துல்லா ஆகியோர் முயற்சித்து வருவதாகவும், மத்திய அரசு அதைக் கவனித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ராவத் கூறினார்.

இதற்கிடையில், விஸ்வ இந்து பரிஷத் சர்வதேச இணை பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின் மற்றும் ஆர்எஸ்எஸ் இணை பொதுச் செயலாளர் தத்தாத்ரேயா ஹோசபாலே ஆகியோர் ஒருங்கிணைந்த பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மேலும் விவாதிக்க அழைப்பு விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Share this News:

Leave a Reply