விவாகரத்து பெற்ற முஸ்லிம் பெண்ணுக்கு வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் உண்டு: உயர்நீதிமன்றம்!

பிரக்யாராஜ் (05 ஜன 2023): அலகாபாத் உயர் நீதிமன்றம் புதன்கிழமை முஸ்லிம் பெண்ணின் விவாகரத்து குறித்து முக்கிய தீர்ப்பை அளித்தது. அதன்படி “ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு விவாகரத்து செய்யப்பட்ட கணவனிடமிருந்து ‘இத்தா’ காலம் முடியும் வரை மட்டுமல்ல, அவருடைய வாழ்நாள் முழுவதும் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு.” என்று தெரிவித்துள்ளது. விவாகரத்துக்கு முன்பு எப்படி அந்த பெண்ணுக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதோ அதே முறையில் வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ‘இத்தா’ என்பது முஸ்லிம் பெண்கள் தங்கள்…

மேலும்...

பில்கீஸ் பானு முறையீட்டு மனு விசாரணையிலிருந்து நீதிபதி விலகல்!

புதுடெல்லி (05 ஜன 2023): பில்கீஸ் பானு வழக்கு விசாரணையிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி விலகியுள்ளார். 2002 கோத்ரா வன்முறையில் பில்கிஸ் பானுவை கூட்டு பலாத்காரம் செய்து அவரது குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற வழக்கில் ஆயுள் தண்டமை பெற்ற 11 பேரின் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா எம் திரிவேதி மீண்டும் விலகியுள்ளார். இதற்கான காரணம் குறிப்பிடப்படவில்லை. கடந்த மாதமும், பானோவின் மறுஆய்வு மனுவை…

மேலும்...

ஏர் இந்தியா விமானப் பயணத்தில் நடந்த அசிங்கம் – கண்டுகொள்ளாத விமான நிறுவனம்!

புதுடெல்லி (04 ஜன 2023): ஏர் இந்தியா பிசினஸ் கிளாஸ்-இல் ஆண் பயணி ஒருவர் பெண் பயணியிடம் முறைகேடாக நடந்து கொண்ட விதம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பெண் பயணிமீது ஆண் ஒருவர் சிறுநீர் கழித்துள்ளார். நியூயார்க்கில் இருந்து டெல்லி செல்லும் ஏஐ-102 ஏர் இந்தியா விமானத்தின் பிசினஸ் கிளாஸ்-இல் இச் சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் பயணி மற்றும் சக பயணிகள் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றாலும், சிறுநீர் கழித்தவர்…

மேலும்...

4500 முஸ்லிம் வீடுகளை இடிக்க உத்தரவு – முஸ்லிம் பெண்கள் போராட்டம் – வீடியோ!

புதுடெல்லி (04 ஜன 2023): உத்தரகாண்டில் ஏறக்குறைய 4500 முஸ்லீம் வீடுகளை இடிக்கத் திட்டமிட்ட ஆட்சிக்கு எதிராக ஹல்த்வானியில் ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தெருக்களில் குவிந்தனர். கஃபுர் பஸ்தி என்று அழைக்கப்படும் ஹல்த்வானி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை” வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது….

மேலும்...

பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது!

புதுடெல்லி (03 ஜன 2023): ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரை இன்று மீண்டும் தொடங்குகிறது. பயணத்தின் இரண்டாவது கட்டம் டெல்லியில் உள்ள காஷ்மீரி கேட்டில் இருந்து காலையில் தொடங்கும். இந்த யாத்திரை யாத்திரை இன்று உத்தரபிரதேசத்திற்குள் நுழைகிறது. ஏற்கனவே கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரையிலான 3122 கி.மீ பயணம் முடிவடைந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்குகிறது. இன்று முதல் வரும் 5ம் தேதி வரை உத்தரபிரதேசத்தில் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொள்கிறார்….

மேலும்...

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகத் தவறானது – உச்ச நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து!

புதுடெல்லி (02 ஜன 2023): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு மிகத்தவறானது என நீதிபதி நாகரத்னா என தெரிவித்துள்ளார். 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் மத்திய அரசின் நோட்டு தடையை உறுதி செய்த நிலையில், நீதிபதி நாகரத்னா இவ்வாறு தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி சட்டம் 26/2ன் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜே. நாகரத்னா ஏற்கவில்லை. பணமதிப்பு நீக்கத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்க…

மேலும்...

பிரபல தொழிலதிபர் தற்கொலை – தற்கொலைக் கடிதத்தில் பாஜக எம்எல்ஏ பெயர்!

பெங்களூரு (02 ஜன 2023): பெங்களூருவில் தொழிலதிபர் பிரதீப் எஸ் (47) சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.) தற்கொலை செய்துகொண்டுள்ளார். பாஜக எம்எல்ஏ உள்பட 5 பேர் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தற்கொலைக்கு அவர்களே தூண்டியதாகவும், தற்கொலைக் கடிதத்தில் கூறியிருபதாக போலீஸார் தெரிவித்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் பிரதீப் தனது காரில் தன்னைத்தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். எட்டு பக்க தற்கொலைக் கடிதத்தில் சிலரது பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் போலிஸார் தெரிவித்தனர். அதில் பாஜக…

மேலும்...

4,000க்கும் மேற்பட்ட முஸ்லிம் வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவு – வீதிக்கு வந்த முஸ்லிம்கள்!

புதுடெல்லி (02 ஜன 2023): உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் உள்ள 4,000க்கும் மேற்பட்ட வீடுகளை அகற்ற உத்தரவிட்டதை அடுத்து, ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தெருக்களில் குவிந்தனர். கஃபுர் பஸ்தி என்று அழைக்கப்படும் ஹல்த்வானி ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ரயில்வே நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்களை” வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவில், 78 ஏக்கர் ரயில்வே நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகக் கூறி, 4,365 கட்டிடங்களை இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற…

மேலும்...

கர்ப்பிணிப் பெண் வயிற்றில் துப்பாக்கிச் சூடு – உத்திர பிரதேசத்தில் நடந்த கொடூரம்!

லக்னோ (01 ஜன 2023): உத்தரபிரதேச மாநிலம் மஹோபாவில் கர்ப்பிணி பெண் ஒருவர் வயிற்றில் மான் வேட்டைக்கு வந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தாய் மற்றும் வயிற்றில் உள்ள சிசு கவலைக்கிடமாக உள்ளது. வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த 30 வயது பெண் வந்தனா மீது இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது, பலத்த காயம் அடைந்த கர்ப்பிணி பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வந்தனாவின் கணவர் பூபேந்திர சிங் ராஜ்புத் கூறுகையில், மானை வேட்டையாட அருகில் வந்த…

மேலும்...

ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு இன்று முதல் RTPCR சோதனை கட்டாயம்!

புதுடெல்லி (01 ஜன 2023): இன்று முதல், கோவிட்-19 பரவல் அதிகமாக உள்ள ஆறு நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சீனா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு RTPCR சோதனை கட்டாயம் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர் முடிவை ஏர் சுவிதா போர்டல் மூலம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும். இன்று முதல் விமான நிலையங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்படும். ஏற்கனவே…

மேலும்...