பணமதிப்பிழப்பு நடவடிக்கை மிகத் தவறானது – உச்ச நீதிமன்ற நீதிபதி பரபரப்பு கருத்து!

Share this News:

புதுடெல்லி (02 ஜன 2023): பிரதமர் மோடியின் பணமதிப்பிழப்பு அறிவிப்பு மிகத்தவறானது என நீதிபதி நாகரத்னா என தெரிவித்துள்ளார்.

5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் நான்கு நீதிபதிகள் மத்திய அரசின் நோட்டு தடையை உறுதி செய்த நிலையில், நீதிபதி நாகரத்னா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கி சட்டம் 26/2ன் கீழ் மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை ஜே. நாகரத்னா ஏற்கவில்லை. பணமதிப்பு நீக்கத்தை ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்றால் அவசரச் சட்டம் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி நாகரத்னா தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு தடையை முன்வைத்திருக்க வேண்டும். அரசு அறிவிப்பு வெளியிட்டு நோட்டுகளை வாபஸ் பெற்றது சரியல்ல. நாடாளுமன்றத்தை அணுகாமல் முடிவெடுத்தது சரியல்ல என ஜே.நாகரத்னா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், பணமதிப்பு நீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று நீதிபதி கவாய் கூறினார். சில பிரிவுகளின் கீழ் நோட்டுகளை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி அதிகாரம் பெற்றுள்ளது. நடைமுறைகள் காரணமாக மட்டும் பணமதிப்பிழப்பு அறிவிப்பை ரத்து செய்ய முடியாது என்றும் நீதிபதி கவாய் உத்தரவில் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 8, 2016 அன்று மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்தது. இந்த நோட்டுகளை திரும்பப் பெறுவதற்கான அரசின் நடவடிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் பரிசீலித்தது. 58 மனுக்களின் மீதான விசாரணையில் இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் ஆஜரானார். சிதம்பரம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையானது நாட்டின் சட்டத்தின் ஆட்சியை கேலிக்கூத்தாக்கியதாகவும், நிதி அமைப்பை அழித்ததாகவும் வாதிட்டார். ஆனால், பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிரான பொருளாதாரக் கொள்கையில் நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு வரம்புகள் உள்ளன என்று ஒன்றிய அரசு வாதிட்டது.


Share this News:

Leave a Reply