120 பெண்களின் ஆபாச வீடியோ – சாமியார் கைது!

புதுடெல்லி (09 ஜன 2023): அரியானாவின் தோஹானா மாவட்டத்தில் உள்ள பாபா பாலகினாத் கோயில் குருக்களாக இருந்தவர் அமர்புரி என்ற ஜிலேபி பாபா. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரை அடுத்து அவர் போலீசாரால் கைதுசெய்யப்பட்டார். தொடர்ந்து, அவரின் குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் பல ஆபாச வீடியோக்கள் சிக்கின. சாமியாராக மாறுவதற்கு முன்பு, தோஹானாவின் ரெயில்வே சாலை பகுதியில் ஜிலேபி விற்று வந்ததால், அவரை அனைவரும் ஜிலேபி பாபா என்றழைத்தனர். ஜிலேபி பாபா ஒரு பெண்ணை…

மேலும்...

இண்டிகோ விமானத்தில் மதுபோதையில் மூவர் ரகளை!

பாட்னா (09 ஜன 2023): இண்டிகோ விமானத்தில் மதுபோதையில் பயணிகளிடம் மூன்று பேர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி – பாட்னா இண்டிகோ விமானத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் பயணி ஒருவர் வயதான பெண் மீது சிறுநீர் கழித்த சம்பவத்தை அடுத்து விமானத்தில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. குடிபோதையில் 3 பேர் கொண்ட கும்பல் விமானத்தில் ஏறி சத்தம் போட்டுள்ளனர். இதனால் பயணிகளுக்கு சிரமம்…

மேலும்...

எட்டாம் வகுப்பு மாணவிக்கு லவ் லட்டர் கொடுத்த ஆசிரியர்!

லக்னோ (08 ஜன 2023): உத்திர பிரதேசத்தில் ஆசிரியர் ஒருவர் எட்டாம் வகுப்பு மாணவிக்கு லவ் லட்டர் கொடுத்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கன்னுஞ் மாவட்டம் பலர்பூர் பகுதியில் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஹரிஒம் சிங் என்ற நபர் ஆசிரியராக வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில், ஆசிரியர் ஹரிஓம் சிங் கடந்த 30ம் தேதி அந்த 8-ம் வகுப்பு மாணவிக்கு ‘ வாழ்த்து மடல் (கிரீட்டிங் கார்டு)’ கொடுத்துள்ளார். பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த…

மேலும்...

மதக்கலவரத்தை உண்டாக்க முயலும் பாஜக எம்பி பிரக்யாசிங் தாக்கூருக்கு எதிராக103 முன்னாள் அரசு அதிகாரிகள் கடிதம்!

புதுடெல்லி (07 ஜன 2023): பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் எம்பி பதவிக்கு தகுதியற்றவர் என்றும் அவர் எடுத்த சத்திய பிரமாணத்தை மீறுவதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 103 முன்னாள் அதிகாரிகள் திறந்த கடிதம் எழுதியுள்ளனர். சமீபத்தில் கர்நாடகாவில் இந்து ஆதரவு அமைப்பு நடத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய பிரக்யாசிங் தாக்கூர் இந்துக்கள் அவர்களது வீடுகளில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருக்க வேண்டும் என்று வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருந்தார்….

மேலும்...

ஷவர்மா சாப்பிட்ட மூவருக்கு வாந்தி பேதி காய்ச்சல்!

இடுக்கி (7 ஜன 2023): கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் நெடுங்கண்டில் சவர்மா சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு உணவு விஷம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் ஜனவரி 1ம் தேதி நடந்தது. ஷவர்மா சாப்பிட்ட ஏழு வயது குழந்தை, வீட்டுத் தலைவி மற்றும் வயதான பெண் மூவருக்கும் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் உடல்நிலை தற்போது திருப்திகரமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது ஷவர்மா…

மேலும்...

ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பால் மரணம்!

இந்தூர் (07 ஜன 2023): ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தொழிலதிபர் மாரடைப்பு ஏற்பட்டு சுருண்டு விழுந்து உயிரிழந்தார். ஐம்பத்தைந்து வயதான பிரதீப் ரகுவன்ஷி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள உடற்பயிற்சி மையத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஜிம்மிற்கு வந்த பிரசாத், உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சிகளில், பிரசாத் திடீரென சரிந்து விழுந்தது பதிவாகியுள்ளது. அவர் பிரசாத் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அதற்குள் அவர் இறந்துவிட்டதாக…

மேலும்...

நாட்டை பாதுகாப்பதே உள்துறை அமைச்சரின் பணி கோவில் திறப்பு விழா அல்ல – அமித்ஷா மீது காங்கிரஸ் பாய்ச்சல்!

அகர்தலா (06 ஜன 2023): அடுத்த ஆண்டு அயோத்தி ராமர் கோயில் திறக்கப்படும் என அமித்ஷா கூறியதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதே உள்துறை அமைச்சரின் பணி என்றும், கோயிலை திறப்பது குறித்து கோயில் அதிகாரிகள் பரிசீலிப்பார்கள் என்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். பாபர் மசூதி – ராமர் கோவில் குறித்த வழக்கில் 2019 நவம்பரில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கியது. சர்ச்சைக்குரிய…

மேலும்...

வட இந்தியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.9 என பதிவு!

புதுடெல்லி (06 ஜன 2023): டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கம் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், டெல்லி மற்றும் ஹரியானாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியுள்ளது. இந்த உயிரிழப்பு அல்லது பிற விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை. ஐந்து நாட்களில் டெல்லியில் ஏற்பட்ட இரண்டாவது நிலநடுக்கம் இதுவாகும். ஏற்கனவே…

மேலும்...

4365 முஸ்லிம் குடும்பங்களை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை!

புதுடெல்லி (05 ஜன 2023): : உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானில் உள்ள ரயில்வே நிலத்தில் இருந்து 4365 குடும்பங்களை வெளியேற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஹல்த்வானில் மூன்று அரசுப் பள்ளிகள், 11 தனியார் பள்ளிகள், 10 மசூதிகள், 12 மதரஸாக்கள், கோவில்கள் மற்றும் மருத்துவமனை. சுமார் அரை லட்சம் மக்களால் ஏழு தசாப்தங்களாக கட்டப்பட்ட குடியேற்றத்தை விட்டு போக வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. நோட்டீஸ் கிடைத்த ஒரு…

மேலும்...

இந்தியாவில் ஒமிக்ரான் பி எஃப் 7 மேலும் நால்வருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது!

கொல்கத்தா (05 ஜன 2023): ஓமிக்ரான் துணை வகை BF7 சீனாவில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா இந்தியாவில் இன்று நான்கு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து மேற்கு வங்கத்திற்கு வந்த நான்கு பேருக்கு BF.7 உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும் நான்கு பேரின் உடல் நிலை திருப்திகரமாக உள்ளது.இதன் மூலம் நாட்டில் பி.எப். உறுதிப்படுத்தப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 7 இல் இருந்து 9 ஆக அதிகரித்துள்ளது. இந்த…

மேலும்...