கனடாவில் போராட்டம் தீவிரம் – ரகசிய இடத்தில் பிரதமர்!

Share this News:

டொராண்டோ (30 ஜன 2022): கனடா அரசின் கட்டாய தடுப்பூசி திட்டம் உள்ளிட்ட கோவிட் விதிகளுக்கு எதிராக தலைநகரில் நடைபெறும் போராட்டம் திவரமடைந்துள்ளது.

கனடாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு விதித்துள்ளது. அதில் தடுப்பூசி கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்தது. இதற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கட்டாய தடுப்பூசி மற்றும் பிற கோவிட் விதிமுறைகளை நீக்க வலியுறுத்தி பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் திரண்டனர்.

சிறுவர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என பல தரப்பு மக்களும் கையில் பதாகைகளுடன் கூடியுள்ளனர். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாகவும் விமர்சித்து வருகின்றனர்.

போராட்டத்தில் மேலும் ஆயிரக்கணக்கானோர் குவியக்கூடும் என்பதால் பிரதமர் ட்ரூடோ மற்றும் குடும்பத்தினர் ரகசிய இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதற்கிடையே போராட்டம் நாடாகும் பகுதிகளில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


Share this News:

Leave a Reply