ஜப்பான் தயாரிப்பு மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக சீனா தகவல்!

Share this News:

பீஜிங் (18 மார்ச் 2020): ஜப்பானின் கண்டுபிடிப்பான புளூ (flu) மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது.

நாளுக்கு நாள்… நொடிக்கு நொடி… பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து முதல் நிவாரணம் பெறும் மருந்து வரை ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் ஜப்பான் கண்டுபிடிப்பு மருந்தான flu drug favipiravir (also known as Avigan) என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது. இம்மருந்து சீனாவில் பலருக்கு கொடுக்கப் பட்டதாகவும் கொரோனா பாஸிடிவ் நோயாளிகளுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாகம் சீனா தெரிவித்துள்ளது.

அதேவேளை உலக சுகாதார மையம் WHO இதுவரை இம்மருந்து குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. இதற்கிடையே அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி ஆய்வில் முதல் பரிசோதனை நேற்று நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source :https://www.theguardian.com/


Share this News:

Leave a Reply