ஜப்பானில் சக்தி வாய்ந்த நில நடுக்கம்!

டோக்கியோ (17 மார்ச் 2022): ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையில் புதன்கிழமை வலுவான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் நான்கு பேர் இறந்துள்ளனர்; 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 7.3 ரிக்டர் அளவிலான நடுக்கம் ஜப்பானின் சில பகுதிகளில் மக்கள் நிற்க முடியாத அளவுக்கு வலிமையாக குலுங்கியது. இதன் தாக்கம் வியாழன் காலையும் இருந்தது. நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சேதத்தின் அளவை மதிப்பிட்டு வருவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா தெரிவித்துள்ளார். நிலநடுக்கத்திற்குப் பிறகு சுமார் 2 மில்லியன் வீடுகள் மின்சாரம்…

மேலும்...

கட்டுக்குள் வந்த கொராணா – கட்டுப்பாடுகளை நீக்கிய நாடு எது தெரியுமா?

டோக்கியோ (29 செப் 2021): ஜப்பானில் கோவிட் பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளதோடு பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதால், அங்கு கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டு உள்ளன. ஜப்பானில் கோவிட் பாதிப்பையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், ஜப்பானில் தற்போது பெரும்பாலான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது; கோவிட் பாதிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளது. இதையடுத்து, ஜப்பான் பிரதமர் யோஷிதே சுகா, ‘ஜப்பானில் கோவிட் பரவல் குறைந்துள்ளது. இதனால், கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கப்படுகின்றன. கோவிட் பெருந்தொற்றால்…

மேலும்...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு!

டோக்கியோ (20 மார்ச் 2021): ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டள்ளது. மேலும் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மியாகி மண்டலத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு 6.9 என்கிற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியை ஒட்டிப் பசிபிக் பெருங்கடலின் கீழ் 73 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜெர்மனியைச் சேர்ந்த புவியியல் ஆய்வுத்துறை முதல் தகவலாக தெரிவித்தது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 ஆக…

மேலும்...

ஜப்பான் தயாரிப்பு மருந்து கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதாக சீனா தகவல்!

பீஜிங் (18 மார்ச் 2020): ஜப்பானின் கண்டுபிடிப்பான புளூ (flu) மருந்து கொரோனாவை கட்டுப்படுத்த உதவுவதாக சீனா தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள்… நொடிக்கு நொடி… பீதியை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. பல்வேறு நாடுகள் இந்த வைரஸுக்கு தடுப்பு மருந்து முதல் நிவாரணம் பெறும் மருந்து வரை ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் ஜப்பான் கண்டுபிடிப்பு மருந்தான flu drug favipiravir (also known as Avigan) என்ற மருந்து…

மேலும்...