ஒரே நாளில் உச்சத்தை தொட்ட டாஸ்மாக் விற்பனை!

Share this News:

சென்னை (09 ஜன 2022): நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனையாகியுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் தமிழகம் முழுவதும் அமலில் உள்ள காரணத்தினால் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட மாட்டாது.

இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது குடிப்போர் அதிக அளவில் மது வாங்க குவிந்துள்ளனர்.

அதிகப்படியாக சென்னை மண்டலத்தில் மட்டும் 50.04 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாயும், திருச்சி மண்டலம் 42.59 கோடிக்கும், கோவை மண்டலம் 41.28 கோடி மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. மிகவும் குறைவாக சேலம் மண்டல 40.85 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.


Share this News:

Leave a Reply