ஒரே நாளில் உச்சத்தை தொட்ட டாஸ்மாக் விற்பனை!

சென்னை (09 ஜன 2022): நேற்று ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 217.96 கோடி மது விற்பனையாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை பொதுமுடக்கம் தமிழகம் முழுவதும் அமலில் உள்ள காரணத்தினால் மதுக்கடைகள் இன்று திறக்கப்பட மாட்டாது. இதன் காரணமாக நேற்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது குடிப்போர் அதிக அளவில் மது வாங்க குவிந்துள்ளனர். அதிகப்படியாக சென்னை மண்டலத்தில் மட்டும் 50.04 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது, மதுரை மண்டலத்தில் 43.20 கோடி ரூபாயும்,…

மேலும்...

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு- புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!

சென்னை (05 ஜன 2022): தமிழகத்தில் கொரோனா, ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாளை முதல் இரவு நேர முழு ஊ ரடங்கிற்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: இரவு நேர ஊரடங்கின் போது பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனை, மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், மருத்துவம் சார்ந்த பணிகள், ஏ.டி.எம்.கள்,…

மேலும்...

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை (22 மே 2021): , தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க…

மேலும்...

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (18 ஏப் 2021): கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த…

மேலும்...

லாக்டவுன் காலத்தில் சாதித்த மாணவி ஆமினா முஹம்மது – வீடியோ இணைப்பு!

ஜித்தா (15 ஜன 2021): புனித நூலான திரு குர்ஆனின் எழுத்துக்களையும் மக்காவின் (கஃபா) கிஸ்வா அரபி எழுத்துக்களையும் வனப்பெழுத்து (Calligraphy) மூலம் வடிவமைத்து சாதித்துள்ளார் மாணவி ஆமினா முஹம்மது. திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அமினா முகமது, சவூதி அரேபியாவின் ஜித்தாவில் உள்ள சர்வதேச இந்தியப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் ஓவியம் எதுவும் முறையாக பயிலாத நிலையில் கோவிட் காலத்தின் லாக்டவுன் நேரத்தில்தான் அமீனா யூடியூப் மூலம் அரபி மொழியின் வனப்பெழுத்து (Calligraphy) வரைவதை…

மேலும்...

டிசம்பர் 20 ஆம் தேதி வரை ஊரடங்கு

ஜெர்மனி (26 நவ 2020): ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஜெர்மனியில் கொரோனாவால் 9.83 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 15 ஆயிரம் பேர் உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து அதிகரித்து வரும் தொற்று பாதிப்புகளை எதிர்கொள்ளும் நடவடிக்கை பற்றி தனது அமைச்சர்களுடன் அந்நாட்டு அதிபர் ஏஞ்செலா மெர்கல் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறும்பொழுது, ஜெர்மனியில் நவம்பர் இறுதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முடியாது. அதனால், வரும் டிசம்பர் 20ந்தேதி…

மேலும்...