முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இந்துத்துவ சாமியார் கைது!

சீதாபூர் (14 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனி கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய சாமியார் முனிதாஸ், எந்த ஒரு இந்து பெண்ணையும்…

மேலும்...

ராமநவமி ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களுக்கிடையே முஸ்லிம்கள் செய்த அந்த நல்ல காரியம்!

லக்னோ (12 ஏப் 2022): உத்தரப் பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்கள் இடப்பட்ட போதிலும், கோசமிட்டவர்களுக்கு முஸ்லிம்கள் பழச்சாறு பரிமாறியுள்ளனர். வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லக்னோவில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது, அதன் ஒரு பகுதியாக, வாள் மற்றும் பிற பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கோசமிட்டுள்ளனர். ஊர்வலத்தின் பின்னணியில் உரத்த குரலில் கேட்கப்பட்ட பாடல்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதாகவும்,…

மேலும்...

பாலியல் மிரட்டல் விடுத்த சாமியாருக்கு எதிராக முஸ்லீம் பெண்கள் போராட்டம்!

லக்னோ (11 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனிதாசுக்கு எதிராக உத்தரப் பிரதேசம் கைராபாத் முஸ்லீம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது. அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய…

மேலும்...

12 ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிவு – 17 பேர் கைது!

லக்னோ (31 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் கசிவு தொடர்பாக பள்ளி ஆசிரியர் உட்பட 17 பேரை கைது செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கை விசாரிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாள் நேற்று கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனை அடுத்து வினாத்தாள் கசிந்ததால்…

மேலும்...

மதரஸாக்களில் வகுப்புகள் தொடங்கும் முன்பு தேசிய கீதம் பாட முடிவு!

லக்னோ (25 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநில மதரசாக்களில் வகுப்புகள் தொடங்கு முன்பு தேசிய கீதம் பாட மதரசா கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்த கூட்டம் ஒன்றில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. மேலும் ஆசிரியர்களின் வருகையை பயோமெட்ரிக் முறையில் பதிவு செய்யவும், மாணவர்களின் சேர்க்கையை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியும் அமைக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. மே 14 மற்றும் மே 27 க்கு இடையில் நடைபெறும் ஆறு பாடங்களுக்கான தேர்வுகளை மதரசா வாரியம் நடத்தும் என்றும்…

மேலும்...

முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை – உத்திர பிரதேசத்தில் கொடூரம்!

நூர்பூர் (22 மார்ச் 2022): உத்தரப்பிரதேச மாநிலம் நூர்பூர் கிராமத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் அஸ்ரெளலி காரமத்தை சேர்ந்த ஜாபர் மற்றும் அவரது இளைய சகோதரர் நூர் ஆகியோரை நூர்பூர் கிராம மக்கள் தாக்கியதில் ஜாபர் உயிரிழந்தார். நூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இரண்டு இளைஞர்களும் கிராம மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட கைகலப்பில் ஜாபர் கொல்லப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறை கண்காணிப்பாளர் கௌசாம்பியின் அறிக்கையின்படி,”திங்கள்கிழமை காலை…

மேலும்...

மாடு கடத்தியதாக வதந்தி – முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்!

லக்னோ (22 மார்ச் 2022): உத்தரப் பிரதேசத்தில், மாடு கடத்தியதாகக் கூறி, பசுக் குண்டர்களால் முஸ்லிம் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். விலங்குகளின் கழிவுகளை அகற்றும் வாகன ஓட்டுநராக 35 வயது அமீர் என்பவர் மீது பசு குண்டர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்...

எம்.எல்.சி தேர்தலில் டாக்டர் கஃபீல்கான் போட்டி!

லக்னோ (16 மார்ச் 2022): வரவிருக்கும் உத்தரப்பிரதேச எம்எல்சி தேர்தலில் தியோரியா-குஷிநகர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி டாக்டர் கஃபீல்கானை வேட்பாளராக நிறுத்துகிறது. இதனை சமாஜவாதி கட்சியின் தேசியச் செயலாளரும் செய்தித் தொடர்பாளருமான ராஜேந்திர சவுத்ரி உறுதிப்படுத்தியுள்ளார். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்த கஃபீல் கான், அவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும் படத்தை ட்வீட் செய்து இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளார். 2017 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரின் பாபா ராகவ் தாஸ் (பிஆர்டி) மருத்துவக்…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் 8 சதவீத முஸ்லீம் வாக்குகளை பெற்ற பாஜக!

லக்னோ (13 மார்ச் 2022): நடந்து முடிந்த உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது எட்டு சதவீத முஸ்லிம் வாக்குகளைப் பெறுவதில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம்கள் எதிராக வாக்களிக்கிறார்கள் என்ற பொதுவான கருத்து இருந்தபோதிலும் இது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. CSDS-லோக்நிதி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் 20 சதவீத முஸ்லிம் வாக்குகளில் சமாஜ்வாடி கட்சி சுமார் 79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும், குறைந்தது 8 சதவீத வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது எனவும், இது 2017ஆம் ஆண்டை விட ஒரு…

மேலும்...

உத்திர பிரதேசத்தில் கல்லூரிக்குள் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை!

அலிகார் (13 மார்ச் 2022): உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகாரில் உள்ள ஒரு முக்கிய கல்லூரியில் “பரிந்துரைக்கப்பட்ட சீருடை” அணியாமல் வளாகத்திற்குள் மாணவர்கள் நுழைய ‘தடை’ அறிவிக்கப் பட்டுள்ளது. ஹிஜாப் அணிந்திருந்த முஸ்லிம் பெண்களை கல்லூரிக்குள் நுழைய கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது. அலிகார் ஸ்ரீ வர்ஷ்னி கல்லூரியில் சனிக்கிழமையன்று வகுப்பிற்குச் செல்லும் போது மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டாம் என்று கல்லூரி நிராகம் வலியுறுத்தியுள்ளது. இதனால் பல மாணவிகள் வகுப்பிற்குச் செல்லாமல் வீடு திரும்பினர். இதுகுறித்து B.Sc. இறுதியாண்டு…

மேலும்...