12 ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாள் கசிவு – 17 பேர் கைது!

Share this News:

லக்னோ (31 மார்ச் 2022): உத்திர பிரதேசத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு வினாத்தாள் கசிவு தொடர்பாக பள்ளி ஆசிரியர் உட்பட 17 பேரை கைது செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரிக்கும் பணியில் சிறப்பு அதிரடிப்படை நியமிக்கப்பட்டுள்ளது. உத்திர பிரதேசம் பல்லியா மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு ஆங்கிலத் தேர்வின் வினாத்தாள் நேற்று கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக 17 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

இதனை அடுத்து வினாத்தாள் கசிந்ததால் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட 24 மாவட்டங்களிலும் திருத்தப்பட்ட தேர்வுத் தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று உத்தரப் பிரதேச மத்யமிக் ஷிக்ஷா பரிஷத் (UPMSS) அறிவித்துள்ளது.


Share this News:

Leave a Reply