முஸ்லீம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இந்துத்துவ சாமியார் கைது!

Share this News:

சீதாபூர் (14 ஏப் 2022): முஸ்லிம் பெண்களை வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்த சாமியார் பஜ்ரங் முனி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி இந்து புத்தாண்டு விழாவையொட்டி உத்தரப் பிரதேசம் கைராபாத் நகரத்தில் உள்ள மகரிஷி ஸ்ரீ லக்ஷ்மண் தாஸ் உதாசின் ஆசிரமத்தின் சாமியார் பஜ்ரங் முனிதாஸ் தலைமையில் ஊர்வலம் ஒன்று சென்றுள்ளது.

அந்த ஊர்வலம் ஷேஷே வாலி மசூதி அருகே சென்றடைந்தபோது பேசிய சாமியார் முனிதாஸ், எந்த ஒரு இந்து பெண்ணையும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் கிண்டல் செய்வதாக தெரிந்தால் நான் முஸ்லிம் பெண்களைக் கடத்தி பொது இடத்தில் வன்புணர்வு செய்வேன் என்று மிரட்டல் விடுத்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று பலரும் வலியுறுத்தினர்.

இதனை அடுத்து சாமியார் தலைமறைவானார். தலைமறைவாக உள்ள பஜ்ரங் முனியை உடனடியாகக் கைது செய்யக் கோரி கோசங்களை எழுப்பியபடி கைராபாத்தில் குழந்தைகளுடன் பெண்கள் சாலையில் பேரணியாகச் சென்றனர்.

இதற்கிடையே இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் முஸ்லிம் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பஜ்ரங் முனி தாஸ் கைது செய்யப்பட்டதாக சீதாபூர் காவல் கண்காணிப்பாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply