ராமநவமி ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோஷங்களுக்கிடையே முஸ்லிம்கள் செய்த அந்த நல்ல காரியம்!

Share this News:

லக்னோ (12 ஏப் 2022): உத்தரப் பிரதேசத்தில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது ஊர்வலத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான கோசங்கள் இடப்பட்ட போதிலும், கோசமிட்டவர்களுக்கு முஸ்லிம்கள் பழச்சாறு பரிமாறியுள்ளனர்.

வட மாநிலங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தபடி உள்ளன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம் லக்னோவில் ராம நவமி கொண்டாட்டத்தின்போது, அதன் ஒரு பகுதியாக, வாள் மற்றும் பிற பயங்கர ஆயுதங்களுடன் வந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக கோசமிட்டுள்ளனர். ஊர்வலத்தின் பின்னணியில் உரத்த குரலில் கேட்கப்பட்ட பாடல்கள், முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டுவதாகவும், வன்முறைக்கு அழைப்பு விடுப்பதாகவும் இருந்தன. எனினும் முஸ்லிம்கள் அவர்களுக்கு பழச்சாறு பரிமாறினர்.

ராமநவமி ஊர்வலத்தின் பின்னணி இசையில் முஸ்லிம்களைக் கொன்று விடுங்கள் என்ற குரல் ஒலித்தது. முஸ்லிம்களுக்கு எதிராக ‘எங்கள் வாள்கள் பேசும், முஸ்லிம்கள் தலை குனிந்து ஜெய் ஸ்ரீராம் என்று அழைப்பார்கள்’ என்பதாக ஊர்வலத்தில் வந்தவர்கள் முழங்கினர். எனினும் அவர்களுக்கு பழச்சாறு வழங்கி அமைதி காத்தனர் முஸ்லிம்கள்.


Share this News:

Leave a Reply