நாளை உருவாகும் புதிய புயல்!

சென்னை (30 நவ 2020):நாளை காலை புதிய புயல் உருவாகஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியிருப்பதாவது தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் இலங்கையை கடந்து புயல் குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும். காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே 975 கிலோ மீட்டர் தூரத்தில் தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை ஆழ்ந்த…

மேலும்...

நிவர் புயலும் தமிழகமும் – முதல்வர் பெருமிதம்!

சென்னை (28 நவ 2020): அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நிவர் புயலால் பெரிய அளவுக்கு சேதம் ஏற்படவில்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்பு அவர் தெரிவித்ததாவது : அனைத்து துறை செயல்பாட்டில் தமிழகம் முதலிடம் என்பது மகிழ்ச்சி தருகிறது. ஆந்திராவில் பெய்த மழையால் தமிழகத்திற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இனி வரும்…

மேலும்...

வங்கக் கடலில் உருவாகும் மற்றும் ஒரு புயல்!

சென்னை (26 நவ 2020): தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்றிரவு பதினொன்றரை முதல் இன்று அதிகாலை இரண்டரை…

மேலும்...

குறைந்து வரும் கொரோனா – தமிழக மக்களுக்கு சற்று ஆறுதல்!

சென்னை (21 அக் 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புதிதாக 3,094 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 6,94,030 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் புதிதாக 857 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1,91,754 ஆக அதிகரித்துள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில், 263 பேருக்கு கொரோனா…

மேலும்...

சட்டசபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி தொடரும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தீர்மானம்!

திருச்சி (19 அக் 2020): தமிழகத்தில் சட்டமன்ற பேரவைத் தோ்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் பேராசிரியா் கே.எம். காதா் மொகிதீன் தெரிவித்தார். திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் திங்கட்கிழமை மாலை அரிஸ்டோ மஹாலில் அக்கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் தலைமையில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் மற்றும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே ஏ.எம். முஹம்மது…

மேலும்...

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை (20 அக் 2020): தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சேலம், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சி, அரியலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னை…

மேலும்...

இவ்வருடம் எப்படி?- வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னை (29 செப் 2020): இந்த வருடம் வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக, குறிப்பாக தென் தமிழக மாவட்டங்களில் பதிவாகும் என்று உலக வானிலை மையத்தின் தெற்காசிய கூட்டமைப்பு பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபாட்டின்(LA-NINA, IOD) அடிப்படையில் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சிராப்பள்ளி, சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய…

மேலும்...

தமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

சென்னை (29 செப் 2020): தமிழகத்தில் இப்போதைக்கு சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று தேர்தல்…

மேலும்...

சென்னையில் குறையும் ஆபத்து!

சென்னை (17 ஜூலை 2020): ‘சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் குறையும்’ என்று கணித அறிவியல் நிறுவனம் புள்ளி விவரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஜூலை 10 மற்றும் 14ம் தேதி இடையே சென்னை மாநகரில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததை சுட்டிக் காட்டி கணித அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், ஒரு நபர் மூலம் எத்தனை நபர்களுக்கு தொற்று பரவுகிறது என்ற கணக்கெடுப்பை நடத்தி ஆர் வேல்யூ என்று மதிப்பீடு செய்துள்ளது. அதன்படி, தொற்று பரவல்…

மேலும்...

தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (29 ஜூன் 2020): தமிழகத்தில் நாளை (ஜூன் 30) ,முடிவடையும் ஊரடங்கு ஜூலை 31 ஆம் தேதி வரை நீடிப்பதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழகம் முழுவதும் ஜூலை 31-ம் தேதி வரை தற்போது அமலில் இருக்கும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு தொடரும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, தேனி மாவட்டங்களில் தற்போது அமலிலுள்ள முழு ஊரடங்கு பலனளித்துள்ளதால், அதேபோன்ற முழு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு…

மேலும்...