TN-Students

9, 10, 11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என உத்தரவு!

சென்னை (25 பிப் 2021): தமிழகத்தில் 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தன. தொடர்ந்து நோய்த்தொற்றின் தாக்கம் குறையாததால் பள்ளிகளில் நேரடி வகுப்புகளாக இல்லாமல், ஆன்லைன், கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் 19-ந் தேதி, பொதுத்தேர்வை எழுத இருக்கும் 10 மற்றும்…

மேலும்...

பிரதமர் மீண்டும் தமிழகம் வருகை – சூடு பிடிக்கும் தமிழக அரசியல்!

சென்னை (25 பிப் 2021): தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பல புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். மாலையில் கோவை வரும் அவர், கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து…

மேலும்...

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி வழங்க ஏற்பாடு!

சென்னை (30 ஜன 2021): வருகிற 1-ந்தேதி முதல் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி முழுக்க முழுக்க இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக இன்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக முன்கள பணியாளர்களில் மருத்துவர்கள், செவிலியர்களில் 6 லட்சம் பேருக்கு…

மேலும்...

அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

சென்னை (22 ஜன 2021): பிற நாடுகளைப் போல பிரதமர்,முதல்வர், அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு மக்களுக்கு நம்பிக்கையளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன்வந்து கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இன்று சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தடுப்பூசி மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்டார். ”சுகாதார பணியாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ மற்றும்…

மேலும்...

தமிழகம், கேரளா தடுப்பூசி போடுவதில் பின்தங்கல்-மத்திய அரசு குற்றச்சாட்டு!

புதுடெல்லி (19 ஜன 2021): தடுப்பூசி போடுவதில் கேரளா மற்றும் தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. முன்னுரிமை பிரிவில் உள்ளவர்களில் 25 சதவீதம் பேர் கூட இதுவரை தடுப்பூசி போடவில்லை. தடுப்பூசியை நம்புமாறு சுகாதார ஊழியர்களை வலியுறுத்துவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மாநிலங்களுடனான வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடந்த உரையாடலில் மத்திய அரசு இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது. தமிழகம் மற்றும் கேரளா தடுப்பூசி போட தயங்குகின்றன என்றும் மத்திய அரசு அப்போது தெரிவித்துள்ளது. தடுப்பூசி…

மேலும்...

பட்டையை கிளப்பும் ஸ்ரீகிருஷ்ணா மாட்டிறைச்சி கடை!

சென்னை (13 ஜன 2021): மாட்டிறைச்சியை வைத்து சங் பரிவார் முஸ்லிம்களுக்கு எதிராக படுகொலைகளை அரங்கேற்றி வரும் நிலையில் ஸ்ரீகிருஷ்ணா பீஃப் ஸ்டால் என்கிற பெயரில் சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படம் அடங்கிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அந்த கடை எங்கிருக்கிறது? என்பது குறித்து தகவல் இல்லை என்றாலும் கடை கண்ணன் என்பவருக்கு சொந்தமானது என அறியப்படுகிறது. அதில் “எங்கள் கடையில் ஹலால் செய்யப்பட மாட்டிறைச்சி கிடைக்கும்” என்கிற வாசகத்துடன் அனைத்து மத புகைப்படங்களும்,…

மேலும்...

உருமாறிய கொரோனா – தமிழகத்தில் ஒருவருக்கு உறுதி!

சென்னை (02 ஜன 2021): தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த இந்தியாவில் 29 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒருவருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், “இங்கிலாந்தில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு உருமாறிய கொரனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் உறுதி செய்யப்பட்டுள்ள 6 பேரில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு தனி அறையில்…

மேலும்...

குஷ்புவை கழட்டி விட பாஜகவின் பலே திட்டம்!

சென்னை (17 டிச 2020): 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி பொறுப்பாளராக பாஜகவின் சார்பில் குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் வரும் 2021 ஏப்ரல்-மே மாதங்களில் அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கும் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் திமுகவே வெற்றி பெறும் என்கிற கணிப்புகள் உள்ள நிலையில், அதிமுகவுடன் தான் கூட்டணி என்பது பாஜகவில் உறுதியாகிவிட்டது. தமிழக பாஜகவும், தேர்தல் அறிக்கை தயாரிப்பு என தேர்தல் பணிகளில் வேகம் காட்டி வருகிறது….

மேலும்...

புரேவி சூறாவளி – கனமழைக்கு தமிழகத்தில் 11 பேர் பலி!

சென்னை (05 டிச 2020):புரேவி சூறாவளியின் வலிமை குறைந்துவிட்டாலும், தமிழ்நாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையில் 11 பேர் கொல்லப்பட்டனர். கடலூரில் வீடு இடிந்து விழுந்ததில் ஒரு தாயும் மகளும் கொல்லப்பட்டனர். கஞ்சிபுரத்தில் மூன்று இளம் பெண்கள் ஆற்றில் விழுந்து இறந்தனர். இருவர் மின்சாரம் தாக்கி இறந்தனர். சென்னை, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய இடங்களில் தலா ஒருவர் இறந்தார். சென்னையில், லேசான மழை பெய்தது. . தெற்கு மாவட்டங்களான ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர்…

மேலும்...

புரவி புயல் – தமிழகத்திற்கு ரெட் அலர்ட்!

சென்னை (02 டிச 2020): நிவர் பயலை தொடர்ந்து மீண்டும் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் உருவெடுத்தது. இதையடுத்து நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. இந்த புயலுக்கு ‘புரெவி’ என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. புரெவி புயல், பாம்பனுக்கு 470 கி.மீ தொலைவிலும், குமரிக்கு 650…

மேலும்...