வழிபாட்டுத் தலங்கள் மறு உத்தரவு வரும் வரை திறக்கப்பட மாட்டாது – தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை (31 மே 2020): கொரோனா பரவலை தடுக்க, தமிழகத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீடிநகாணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து நீடிக்கும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வழிபாட்டுத் தலங்களில் பொது மக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்களுக்கு மறு உத்தரவு வரும் வரை தடை நீடிக்கும். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலாத்தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை…

மேலும்...

உச்சத்தை தொடும் கொரோனா – தமிழகத்தில் ஒரே நாளில் 12 பேர் பலி!

சென்னை (29 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்‍கு நாள் வேகமாகப் பரவிவருவது, மக்‍களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்‍கு நேற்று, ஒரே நாளில் 827 பேருக்‍கு…

மேலும்...

தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை!

சென்னை (28 மே 2020): தமிழகத்தில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 18 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா நோய் தொற்று உறுதியானதாகவும் அறிக்கை வெளியாகியுள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு 508 ஆண்களும், 309 பெண்கள் என 817 பேர் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 137 பேர்…

மேலும்...

தமிழகத்தில் நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை மூடல்!

சென்னை (27 மே 2020): தமிழகத்தில் உள்ள நோக்கியா மொபைல் போன் தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதி வேகத்தில் பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில்தான் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா தொலைத் தொடர்பு கியர் உற்பத்தி ஆலையில், ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதால் ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எத்தனை ஊழியர்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டார்கள் என்கிற விவரத்தினை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

மேலும்...

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் உச்சத்தை தொட்ட கொரோனா பாதிப்பு!

சென்னை (25 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 805 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் மே 31-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு!

சென்னை (24 மே 2020): தமிழகத்தில் இன்று 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சுகாதாரத்துறை அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 833 பேர்…

மேலும்...

டெல்லியில் சிக்கித் தவித்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் சென்னை புறப்பாடு!

புதுடெல்லி (16 மே 2020): கொரோனா தொற்று எதிரொலியாக தனிமைப் படுத்தலில் இருந்த 700 தமிழக தப்லீக் ஜமாத்தினர் முழு தனிமைப் படுத்தல் முடிந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகம் புறப்பட்டனர். டெல்லி நிஜாமுத்தீன் மர்கஸில் இருந்த தமிழக தப்லீக் ஜமாத்தினர் பலர் ஊரடங்கு காரணமாக தமிழகம் வர முடியாமல் இருந்தனர். மேலும் அவர்கள் பல்வேறு தனிமைபடுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் தமிழக அரசிற்கு தமிழக தப்லீக் ஜமாத்தினரை தமிழகம் மீட்டு வரவேண்டி பல்வேறு தரப்பிலும்…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாண்டியது!

சென்னை (15 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை தாணியது பலி எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பரிசோதனை அதிகம் மேற்கொள்ளும் மாநிலங்களின் வரிசையில் முதலிடத்தில் தமிழகம் தான் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பல்வேறு வழிகாட்டுதல்களை சுகாதாரத்துறை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிக அளவில் பதிவாகி வருவதைக் காண…

மேலும்...

டெல்லியை மிஞ்சிய தமிழகம் – கொரோனா பாதிப்பில் மூன்றாமிடம்!

சென்னை (11 மே 2020): கொரோனா பாதிப்பில் தமிழகம், இந்திய அளவில் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை, 7 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. நேற்று புதியதாக 669 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டிருப்பது கண்டறியப் பட்டுள்ளது. புதியதாக 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 47 பேர் தமிழகத்தில் தொற்றால் உயிரிழந்துள்ளனர். ஆறுதல் அளிக்கக்கூடிய செய்தியாக இன்று மட்டும் 135 பேர் தொற்றிலிருந்து குணம் அடைந்துள்ளனர். இதுவரை 1,959 பேர் கொரோனா தொற்றிலிருந்து…

மேலும்...

தமிழகத்தில் ஒரே நாளில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு!

சென்னை (07 மே 2020): தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவில் அதி வேகத்தில் பரவி வருகிறது. இது தமிழகத்திலும் அதன் வீரியத்தை காட்டி வருகிறது. இந்நிலையில் புதன் கிழமை மட்டும் தமிழகத்தில் 771 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட 771 பேரில் 575 பேர் ஆண்கள், 196 பேர் பெண்கள் ஆவர்.இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் மொத்த…

மேலும்...