தமிழக தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!

சென்னை (29 செப் 2020): தமிழகத்தில் இப்போதைக்கு சட்டமன்றத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்தும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் காலியாக இருக்கின்றன. அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தற்போதைக்கு தேர்தல் நடத்தும் திட்டமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இச்செய்தியைப் பகிருங்கள்:

Leave a Reply