தளர்வுகள் இல்லாத ஊரடங்கு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Share this News:

சென்னை (22 மே 2021): , தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. நாட்டிலேயே தினசரி கொரோனா பாதிப்பு அதிகம் பதிவாகும் மாநிலமாக தமிழகம் தற்போது உள்ளது. கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு அமல்படுத்தியுள்ள ஊரடங்கு வரும் 24-ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ளது.

இதனால், மருத்துவ நிபுணர்களுடன் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ நிபுணர் குழு பரிந்துரைத்தது. இந்த ஆலோசனைக்குப் பிறகு அனைத்துக் கட்சிகள் அடங்கிய சட்டமன்ற கட்சி குழுவுடன் முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் போது, ஊரடங்கை நீட்டிக்க அனைத்து கட்சி எம்.எல்.ஏக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, தமிழகத்தில் 24 ஆம் தேதி முதல் ஒருவாரம் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதேவேளை பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி. நாளை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரைகடைகள் திறக்க அனுமதி அளிக்கபப்ட்டுள்ளது.


Share this News:

Leave a Reply