தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு – தமிழக அரசு அறிவிப்பு!

Share this News:

சென்னை (18 ஏப் 2021): கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கு. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு லாக்டவுன் அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா அதிக அளவில் பரவி வரும் நிலையில் தமிழகத்தில் கடந்த 10-ந் தேதி முதல் சில புதிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் கொரோனா தொடர்ந்து பரவி வருகிறது. இதனால் புதிய கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழகத்தில் வரும் 20-ந் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. அதாவது இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். மேலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்.


Share this News:

Leave a Reply