ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து குறித்து அதிர்ச்சி தரும் ஆய்வு தகவல்கள்!

புதுடெல்லி (25 மே 2020): கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்காலிகமாக வழங்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் குறித்து அதிர வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வைரஸ் பரவல் தடுப்பு முயற்சிகளில் மலேரியா மருந்தான ஹைட்ராக்சி குளோரோகுயினை பயன்படுத்தலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்தது. மேலும், சுகாதாரப் பணியாளர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த மருந்தை எடுத்துக்கொள்ளலாம் என ஐ.சி.எம்.ஆர். பரிந்துரைத்தது. இதனையடுத்து உலக…

மேலும்...

மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு!

மயிலாடுதுறை (25 மே 2020): மயிலாடுதுறை அருகே மசூதியில் பெருநாள் தொழுகை நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகமெங்கும் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப் பட்டு வருகிறது. 30. நாட்கள் நோன்பிருந்த முஸ்லிம்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை வீட்டில் இருந்தபடி கொண்டாடி வருகின்றனர். மேலும் வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டிருப்பதால் பெருநாள் தொழுகை வீட்டிலேயே தொழுதுகொண்டனர். இந்நிலையில் மயிலாடுதுறாஇ அருகே வடகரை மசூதியில் 75க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி பெருநாள் தொழுகைநடத்தியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதனை தடுக்காத…

மேலும்...

அதிமுக செயல்பாடு குறித்து ஜி.கே.வாசன் பரபரப்பு அறிக்கை!

சென்னை (24 மே 2020): தமிழக அரசு இப்போதைய அசாதாரண சூழலில் மக்களுக்காக ஆற்றி வரும் பணிகளுக்கு இடையில் எதிர்கட்சியினர் எழுப்பும் குற்றச்சாட்டுகள் எடுபடாது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”தி.மு.க அமைப்புச் செயலாளர் திரு. ஆர்.எஸ்.பாரதி M.P. பட்டியலின, பழங்குடியின மக்களை அவமதிக்கும் வகையில் பேசப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். அவர் மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை…

மேலும்...

அபுதாபியில் கொரோனாவுக்கு இந்திய ஆசிரியர் ஒருவர் மரணம்!

அபுதாபி (24 மே 2020): ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் உள்ள பள்ளியில் பணிபுரிந்த மூத்த இந்திய ஆசிரியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். 50 வயதான ஹிந்தி ஆசிரியர், கடந்த மே 7ம் தேதி இவர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நோய்த் தொற்றால் இன்று (மே 24) பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள், மாணவர்கள், ஹிந்தி ஆசிரியர் கையாண்ட வகுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான அம்சத்தை கொண்டு…

மேலும்...

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடு உயர்வு!

சென்னை (24 மே 2020): தமிழகத்தில் இன்று 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த சுகாதாரத்துறை அறிவிப்பில், “தமிழகத்தில் இன்று புதிதாக 765 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் 6 பேரும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா ஒருவரும் என 8 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 833 பேர்…

மேலும்...

பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எப்போது – அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ஈரோடு (24 மே 2020): பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும். இதனை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்றார். மேலும் பிளஸ் டூ தேர்வு விடைத்தாள்களை திருத்த ஆசிரியர்கள் மறுத்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரியலூர் மாவட்ட பள்ளிகளின்…

மேலும்...

சென்னையில் கட்டுப்படாத கொரோனா – சிறப்பு வார்டாக மாறும் விளையாட்டு அரங்கம்!

சென்னை (24 மே 2020): சென்னையில் கொரோனா பரவல் கட்டுப்படாத நிலையில் நேரு விளையாட்டு அரங்கை கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர், தேனாம்பேட்டை ஆகிய 4 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதன்படி சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. அதில், ராயபுரத்தில் ஒரே நாளில் 131 பேருக்கு கொரோனா…

மேலும்...

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை..!

புதுடெல்லி (24 மே 2020): இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும், இந்தியாவில் ஒரே நாளில் அதிகபட்ச பாதிப்பாக 6,757 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. 3,867 பேர் பலியாகி உள்ளனர். 54,441 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத…

மேலும்...

முஸ்லிம்களின் தொழுகைக்காக திறக்கப்பட்ட தேவாலயம் – கொரோனாவால் நிகழ்ந்த அதிசயம்

பெர்லின் (24 மே 2020): ஜெர்மனியில் சமூக விலகலுடன் தொழுகை நடத்த அரசு அனுமதித்துள்ள நிலையில் கிறிஸ்தவ தேவாலயத்திலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்தியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸால் பெரும்பாலான நாடுகளில் தேவாலயங்கள், மசூதிகள், கோவில்கள் என அனைத்து வழிபாட்டுத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜெர்மனியில் சமூக விலகல் விதிமுறைகளின்படி தேவாலயங்கள், மசூதிகளை திறந்து வழிபாடு நடத்த அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது இப்படியிருக்க ஜெர்மனியின் பெர்லின் நியோகோலின் மாவட்டத்தில் உள்ள தார் அல்…

மேலும்...

சென்னையை தவிர சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவு!

சென்னை (23 மே 2020): சென்னை பெருநகரம் தவிர, தமிழகம் முழுவதும் நா‌ளை முதல் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், பெருநகர சென்னை காவல் துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில், முடி திருத்தும் மற்றும் அழகு நிலையங்கள், நா‌ளை முதல் கா‌லை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இயங்க அனுமதிக்கப் படுவதாகவும், தடை செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள முடி திருத்தும்…

மேலும்...