மத்திய அரசுக்கு ஆதரவாக ட்விட்டர் பதிவு – டெண்டுல்கர் மீது விசாரணைக்கு சிவசேனா அரசு உத்தரவு!

மும்பை (08 பிப் 2021): மத்திய அரசுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராகவும் ட்விட்டரில் பதிவிட்ட பிரபலங்களின் பதிவுகள் குறித்து விசாரணை நடத்த மகாரஷ்டிர அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை உறுதி செய்யவும் கோரி விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து அமெரிக்க பாப் பாடகி ரெஹானா குரல்…

மேலும்...

பாஜக தலைவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்தரவதை செய்த சிவசேனாவினர்!

சோலாப்பூர் (08 பிப் 2021): மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சனம் செய்த பாஜக தலைவர் மீது தாக்குதல் நடத்திய சிவசேனாவினர் அவருக்கு புடவை உடுத்தி வளையல் அணிவித்து சித்ரவதை செய்துள்ளனர். கடந்த காலங்களில் உத்தவ் தாக்கரேவை விமர்சிப்பவர்களை சிவசேனாவினர் தாக்கியுள்ளனர். முன்னாள் கடற்படை அதிகாரியான மதன் சர்மா, தாக்கரேவை கேலி செய்யும் கார்ட்டூனைப் பகிர்ந்ததற்காக கடந்த ஆண்டு சிவசேனாவினரால் தாக்கப்பட்டார். இந்நிலையில் உத்தவ் தாக்கரேயை விமர்சனம் செய்த பாஜக தலைவர் ஷிரிஷ் கட்டேகரை முற்றுகையிட்ட சிவசேனாவினர்…

மேலும்...

பாஜகவை விட்டு விலகும் முக்கிய தலைவர்கள்!

அமிர்தசரஸ் (07 பிப் 2020): பஞ்சாபில் உள்ளாட்சி மன்றத் தேர்தளுக்கு ஏழு நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் பல பாஜக முக்கிய தலைவர்கள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். கடந்த மாதம் மட்டும் கட்சியின் முக்கிய தலைவரான மல்விந்தர் சிங் காங் உட்பட 20 பாஜக தலைவர்கள் பாஜகவை விட்டு வெளியேறினர். மேலும் விவசாயிகளின் போராட்டத்திற்கு பயந்து பாஜக பல இடங்களில் பிரச்சாரம் செய்யக்கூட முடியவில்லை. பஞ்சாபில் எட்டு மாநகராட்சிகள் மற்றும் 109 நகராட்சி மன்றங்கள் / நகர்ப்புற பஞ்சாயத்துகளில்…

மேலும்...

ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை முந்திய காங்கிரஸ்!

ஜெய்ப்பூர் (31 ஜன 2021): ராஜஸ்தான் நகராட்சி தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் காங்கிரஸ் முன்னணி வகிக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள 2601 இடங்களில் காங்கிரஸ் 1012 இடங்களிலும் . பாஜக 947 இடங்களிலும் முன்னணியில் உள்ளன. 20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. இதில் பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவியது. இன்று வாக்கு எண்ணும் பணி நடைபெறு…

மேலும்...

அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் – ஜேபி நட்டா எடப்பாடி சந்திப்பு திடீர் ரத்து!

மதுரை (30 ஜன 2021): அதிமுக பாஜக கூட்டணியில் 62 தொகுதிகளை பாஜக கேட்டு அடம்பிடிப்பதால் அதிமுக பாஜக கூட்டணியில் குழப்பம் நீடிக்கிறது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தங்களது பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் அதிமுக கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த பாஜ, பாமக, தேமுதிக, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் அதிக சீட்டு கேட்டு அடம் பிடிக்கின்றன….

மேலும்...

ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அனுமதிக்க மாட்டார்: மஹுவா மொய்த்ரா!

கொல்கத்தா(24 ஜன 2021): “நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இப்போது இருந்தால் ஜெய் ஸ்ரீராம் என கூச்சலிட அனுமதித்திருக்க மாட்டார்” என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்தாரா தெரிவித்துள்ளார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளான நேற்று கொல்கத்தாவில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த ‘பரக்ரம் திவாஸ்’ விழாவில் கூட்டத்தின் போது பாஜக ஆர்வலர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ கோஷங்களை எழுப்பியதை அடுத்து கோபத்தில் மம்தா பானர்ஜி அந்த இடத்தை விட்டு வெளியேறினார். இந்த விழாவில்…

மேலும்...

பாஜக மண்ணை கவ்வ வேண்டியதுதான் – பாஜக தலைவர்கள் அதிருப்தி!

புதுடெல்லி (24 ஜன 2021): விவசாயிகளின் வேலைநிறுத்தத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற மத்திய அரசின் முடிவு குறித்து பஞ்சாப் பாஜக தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி நினைத்திருந்தால் வேலைநிறுத்தத்தை ஒரு நாளில் முடித்திருக்க முடியும் என்று பாஜக தேசிய துணைத் தலைவர் லட்சுமி காந்தா சாவ்லா கூறினார். அடுத்த மாதம் பஞ்சாபில் நடைபெறும் உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் விவசாயிகளின் வேலைநிறுத்தம் பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் பாஜாக தலைவர் தெரிவித்துள்ளார். பஞ்சஸப்பில் நகராட்சி மன்றத்…

மேலும்...

ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடன் தொடர்புடைய அதிகாரிகள் நீக்கம் – அமெரிக்க அதிபர் அதிரடி!

வாஷிங்டன் (22 ஜன 2021): ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவுடன் தொடர்பு வைத்திருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவரை பைடன் அரசு, தனது நிர்வாகத்திலிருந்து நீக்கம் செய்துள்ளது. அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்றார். அவருடன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் அந்நாட்டின் துணை அதிபராகப் பதவியேற்றார். ஜோ பைடன் பதவியேற்றதிலிருந்தே பல அதிரடி மாற்றங்களை கொண்டு வருகிறார். குறிப்பாக முன்னாள் அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்த மக்கள் விரோத திட்டங்களுக்கு…

மேலும்...

மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலிருந்து மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

கொல்கத்தா (22 ஜன 2021): மேற்கு வங்க மம்தா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் விலகி வருவதால் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜீப் பானர்ஜியும் பதவி விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ராஜீப் பானர்ஜி தனது மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய முடிந்ததில் பெருமை…

மேலும்...
Temple Attack bjp

கோவில்கள் மீதான தாக்குதல்களில் பாஜகவினருக்குத் தொடர்பு – டிஜிபி தகவல்!

புதுடெல்லி (17 ஜன 2021): ஆந்திர மாநிலத்தில் கோயில்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவினருக்குத் தொடர்பிருப்பதாக ஆந்திர டிஜிபி சவாங் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. சில கோயில்கள் சேதமடைந்துள்ளன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பலர் கைதாகியுள்ளார்.. இந்நிலையில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்களும் 4 பேர்…

மேலும்...