மேற்கு வங்கத்தில் மம்தா அமைச்சரவையிலிருந்து மற்றும் ஒரு அமைச்சர் ராஜினாமா!

Share this News:

கொல்கத்தா (22 ஜன 2021): மேற்கு வங்க மம்தா தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வனத்துறை அமைச்சர் ராஜீப் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார்.

தேர்தலுக்கு சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸிலிருந்து தொடர்ந்து பலர் விலகி வருவதால் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் ராஜீப் பானர்ஜியும் பதவி விலகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ராஜீப் பானர்ஜி தனது மேற்கு வங்காள மக்களுக்கு சேவை செய்ய முடிந்ததில் பெருமை தெரிவித்ததோடு, தனக்கு வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். ராஜீவ் பானர்ஜி எதிர்காலத்தைப் பற்றி விரிவாகக் கூறவில்லை.

மம்தா பானர்ஜிக்கு விசுவாசமாக இருந்த சுவேந்து ஆதிகாரி சமீபத்தில் பதவி விலகி திரிணாமுலுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தினார். பதவி விலகிய சுவேந்து, பின்னர் பாஜகவில் சேர்ந்தார்.

இதற்கிடையில், திரிணாமுல் தலைமைக்கு நெருக்கமான வங்காள நடிகர் ருத்ரானில் கோஷ் பாஜகவுடன் இணைவார் என்று வதந்திகள் பரவி வருகின்றன.


Share this News:

Leave a Reply