அபுதாபி மீது ட்ரோன் தாக்குதல் – 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் பலி!

அபுதாபி (17 ஜன 2022): அபுதாபி விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட வான் வழி தாக்குதலில் எரிபொருள் டேங்கர் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆறு பேர் காயமடைந்தனர். பலியானவர்களில் இரண்டு இந்தியரும், ஒரு பாகிஸ்தானியரும் அடங்குவர். மேலும் ஆறு பேர் மிதமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மீது தாக்குதல் நடத்தியதை ஏமனின் ஈரான் ஆதரவு ஹுத்திகள் ஒப்புக்கொண்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் திங்கள்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும்...

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல்!

ஜம்மு (25 டிச 2021): ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 2 தீவிரவாதிகளை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர். சோபியான் வட்டாரத்தில் உள்ள சௌகாம் பகுதியில் அதிகாலையில் இந்த மோதல் தொடங்கியது. அந்த இடத்தில் மோதல் நீடித்து வருவதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகளுடன் மோதல் ஏற்பட்டது. இத்தாக்குதலில் ஒரு காவல்துறை அதிகாரியும் உள்ளூர்வாசி ஒருவரும் கொல்லப்பட்டனர். அர்வானி…

மேலும்...

மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருந்தபோது பள்ளி மீது பஜ்ரங் தள் அமைப்பினர் வெறிச்செயல்!

போபால் (07 டிச 2021): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளி ஒன்றின் மீது பஜ்ரங் தள் அமைப்பினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். மத்திய பிரதேசம் விதிஷா மாவட்டத்தில் உள்ள செயின்ட் ஜோசப் பள்ளியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலின் பின்னணியில் பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பி செயல்பாட்டாளர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அந்த பள்ளியில் மாணவர்கள் மதம் மாற்றுவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவிய நிலையில்…

மேலும்...

காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வீடு மீது கொடூர தாக்குதல்!

புதுடெல்லி (16 நவ 2021): காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குர்ஷித் வீட்டின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சல்மான் குர்ஷித் எழுதிய புத்தகம் ஒன்று சமீபத்தில் வெளியானது. இதில் இந்துத்துவாவை ஐஎஸ்ஸுடன் ஒப்பிட்டு எழுதியிருந்தார். இந்த புத்தகத்திற்கு சங்க பரிவார் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தெலங்கானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ராஜா சிங், புத்தகத்தைத் தடை செய்யக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் நைனிடாலில்…

மேலும்...
Temple Attack bjp

கோவில்கள் மீதான தாக்குதல்களில் பாஜகவினருக்குத் தொடர்பு – டிஜிபி தகவல்!

புதுடெல்லி (17 ஜன 2021): ஆந்திர மாநிலத்தில் கோயில்கள் மீது நடந்து வரும் தாக்குதல்களில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பாஜகவினருக்குத் தொடர்பிருப்பதாக ஆந்திர டிஜிபி சவாங் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பல கோவில்கள் தாக்கப்பட்டுள்ளன. சில கோயில்கள் சேதமடைந்துள்ளன. இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு பலர் கைதாகியுள்ளார்.. இந்நிலையில் இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 15 பேர் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்களும் 4 பேர்…

மேலும்...

பிரான்ஸ் தேவாலயத்தில் நடந்த கத்தி குத்தில் 3 பேர் பலி!

பாரிஸ் (29 அக் 2020): பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் நோட்ரி டேமி என்ற கிருஸ்தவ தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்திற்குள் இன்று மதியம் கத்தியுடன் நுழைந்த மர்மநபர் அங்கு இருந்தவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளான். இந்த கொடூர கத்திக்குத்து தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். மேலும், இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும்...

அதிர்ச்சி சம்பவம் – உத்திர பிரதேசத்தில் மாணவரை நிர்வாணமாக்கி கொடூர தாக்குதல்!

காசியாபாத் (05 அக் 2020): உத்திர பிரதேசத்தில் 12 ஆம் வகுப்பு மாணவரை 10 ஆம் வகுப்பு மாணவர்கள் நிர்வாணமாக்கி கொடூரமாக தாக்கியுள்ளனர். உத்தரபிரதேசத்தின் காசியாபாத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒரு அதே பள்ளியில் படிக்கும் 10 ஆம் வகுப்பு மாணவியை காதலித்து வந்தார். 17 வயதான அந்த மாணவர் மாணவியை சந்திக்க தனது 2 நண்பர்களுடன் காரில் சென்று உள்ளார். அவர்களை பின்தொடர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவர்கள் சிலர் 12 ம் வகுப்பு…

மேலும்...

ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்!

பாட்னா (06 ஜூன் 2020): ஜெய்ஸ்ரீராம் என்று கூற மறுத்த 18 வயது வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். கொரோனாவின் கோரத்தாண்டவம், வடமாநிலங்களை தாக்கிய புயல், பொருளாதார நெருக்கடி என நாடே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் மதவெறி வன்முறையும் சேர்ந்து நாட்டிற்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது. இந்நிலையில் பீகார் மாநிலம் மோதிஹரி நகரில் 18 வயது முஹம்மது இஸ்ரேல் என்ற வாலிபரை ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி சில…

மேலும்...

கிராமத்தில் நுழைந்த போலீஸ் முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வீடியோ!

ஷாம்லி (31 மே 2020): உத்திர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் கிராமத்தில் நுழைந்த போலீஸார் பெண்கள் உட்பட பலர் மீது கண்முடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். உத்தரப்பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தின் தப்ரானா கிராமத்தில் மாட்டை கொலை செய்த வழக்கில் அப்சல் என்பவரை கைது செய்யச் சென்ற போலீசாருக்கும் கிராமத்தினருக்கும் மோதல் ஏற்பட்டதாகவும் இதனை அடுத்தே கிராம மக்கள் மீது போலிசார் தாக்குதல் நடத்தியதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. ஆனால் கிராம மக்கள் கூறுகையில், போலீசார் திட்டமிட்டே கிராம மக்கள்…

மேலும்...

பால் வாங்க வெளியில் சென்றவர் போலீஸ் தாக்குதலில் மரணம்!

கொல்கத்தா (26 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் பால் வாங்க வெளியில் சென்றவர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது….

மேலும்...