ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பினர் கொடூர தாக்குதல்!

Share this News:

பாட்னா (06 ஜூன் 2020): ஜெய்ஸ்ரீராம் என்று கூற மறுத்த 18 வயது வாலிபர் மீது பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

கொரோனாவின் கோரத்தாண்டவம், வடமாநிலங்களை தாக்கிய புயல், பொருளாதார நெருக்கடி என நாடே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் மதவெறி வன்முறையும் சேர்ந்து நாட்டிற்கு பெரிய சவாலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் பீகார் மாநிலம் மோதிஹரி நகரில் 18 வயது முஹம்மது இஸ்ரேல் என்ற வாலிபரை ஜெய் ஸ்ரீராம் என கூற வலியுறுத்தி சில கும்பல் மிரட்டியுள்ளது. மேலும் அவ்வாறு கூறாவிட்டால் உன்னை வெட்டுவோம் என்றும் அந்த கும்பல் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து ஜெய் ஸ்ரீராம் என கூற மறுத்த வாலிபரை அந்த கும்பல் கொடூரமாக தாக்கியுள்ளது. இதனால் படுகாயம் அடைந்த முஹம்மது இஸ்ரேல் மோதிஹரி நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து மெஹ்சி காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட வாலிபர் தரப்பில் அளித்துள்ள புகாரில், பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த சிலர் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். அவர்கள் 7 பேர் அடங்கிய கும்பல் என்றும் கையில் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கொண்டு தாக்கியதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.

முஹம்மது இஸ்ரேல் கழுத்தில் கத்தியால் கீறிய காயங்களும் உள்ளன. இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.

கொரோனா பரவலை தடுக்க ஒட்டு மொத்த நாடே ஒற்றுமையுடன் போராடி வரும் சூழலில் இந்துத்வா சிந்தனை கொண்டவர்களும் ஊடகங்களும் முஸ்லிம்களை குறி வைத்து செயல்பட்டு வருவது வேதனை அளிப்பதாகும்.


Share this News: