எங்களை ஏன் அழைக்க வேண்டும்? – பிரதமர் மோடி மீது மம்தா காட்டம்!

கொல்கத்தா (20 மே 2021): பிரதமர் மோடி இன்று (20.05.2021) கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் மாவட்ட மாஜிஸ்ட்ரேட்டுகள் மற்றும் கள அதிகாரிகளோடு காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் கலந்துகொண்டார். இந்தநிலையில் பிரதமருடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மம்தா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார். ஆலோசனை கூட்டத்தில் தன்னை பேச அனுமதிக்கவில்லையென குற்றஞ்சாட்டிய மம்தா, இது ஒரு வழி தகவல்…

மேலும்...

யார் இந்த சித்தார்த்? மோடி அரசை எதிர்க்க காரணம் என்ன? – பரபரப்பு பின்னணி!

கொரோனா பரவலின் இரண்டாவது அலை இந்திய நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்க மத்திய அரசின் கையாலாகதத் தனத்தை உலக நாடுகள் கண்டித்தப்படி உள்ளன. இந்நிலையில் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர் கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. அதேவேளை திரையுலக பிரபலங்கள் அனைவரும் மவுனம் சாதிக்கின்றனர். ஆனால் நடிகர் சித்தார்த் மட்டும் சமூக வலைதலங்களில் மோடி அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அவருக்கு பாஜகவினரால் மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்., ஆனால் தனது மத்திய அரசிற்கு எதிரான கேள்விகள் தொடரும்…

மேலும்...

அனைத்து நிறுவனங்களும் இந்தியாவைக் கைவிட்டு விட்டன – உச்சநீதிமன்ற பார் தலைவர்!

வயர் இணைய இதழில் கரண் தாப்பர் உச்ச நீதிமன்ற பார் அசோஷியேசனின் மேனாள் தலைவர் துஷ்யந்த் தாவேவை பேட்டி கண்டுள்ளார். கோவிட் பேரலை சூழ்ந்துள்ள மிக மோசமான சமயத்தில் மோடி அரசு எப்படி இந்தியாவை ஒட்டுமொத்தமாக கைவிட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கும் தாவே, இந்த தருணத்தில் திருவாளர் மோடியின் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியைத் துரத்துவதாகவே அமைந்துள்ளது என்கிறார்.. இதை விரிவாக விளக்கும் போது இந்த ஆளுகையின் முக்கிய குறைகளாக அவர் குறிப்பிடும் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்….

மேலும்...

தேர்தல் ஆணையத்திற்கு மோடி ஆணையம் என பெயர் வைக்கலாம் – மம்தா சாடல்!

கொல்கத்தா (11 ஏப் 2021): தேர்தல் ஆணையத்தின் பெயரை ‘மோடி ஆணையம் ‘ என்று மாற்ற வேண்டும் என்று வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரியுள்ளார். மேற்கு வங்கத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் கலவர பூமியாகியுள்ள கூச் பெஹார் மாவட்டத்திற்கு எந்த அரசியல் தலைவரும் 72 மணி நேரம் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது. அங்கு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு வருவதாக மம்தா பானர்ஜி அறிவித்ததை அடுத்து…

மேலும்...

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு குற்றவாளிகள் விடுவிப்பு!

அகமதாபாத் (31 மார்ச் 2021): இஷ்ரத் ஜஹான் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூன்று போலீஸ்காரர்களை அலகாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்தது. ஏற்கனவே இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் விடுவிக்கப்பட்டனர். சிறப்பு சிபிஐ நீதிபதி வி.ஆர்.ராவல், போலீஸ் அதிகாரிகளான ஜி.எல். சிம் கால், தருண் பரோத் மற்றும் அனாஜு சவுத்ரி ஆகியோரை விடுவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க குஜராத் அரசு அனுமதி மறுத்து வருவதாக மார்ச் 20 அன்று சிபிஐ…

மேலும்...

நீக்கப்பட்ட பிரதமர் மோடி – பாஜகவில் பரபரப்பு!

சென்னை (28 மார்ச் 2021): தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலைக்கு அஞ்சி, பாஜக வேட்பாளர்களின் சுவரொட்டிகள் மற்றும் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் பெயர்கள் நீக்கப்பட்டு வருகின்றன. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் மோடியின் பெயர் தொடர்ந்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே எழுதப்பட்ட மோடியின் பெயர் ஒயிட்வாஷ் மூலம் அழிக்கப்படுகின்றன.. அதிமுக மட்டுமல்லாமல் பாஜக வேட்பாளர்களும் மோடியை தவிர்க்கின்றனர். அதற்கு பதிலாக ஜெயலலிதாவின் பெயரைப் பயன்படுத்துகின்றனர்….

மேலும்...

பிரதமருடன் ஆலோசனை – முதல்வர் எடப்பாடி புறக்கணிப்பு!

சென்னை (17 மார்ச் 2021): இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களோடு இன்று ஆலோசிக்கிறார். இந்தநிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் இருப்பதால், பிரதமருடனான ஆலோசனையில் அவர் பங்கேற்கமாட்டார் எனவும், அவருக்குப் பதிலாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பங்கேற்பார் என ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன அதேபோல மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட பிரச்சாரக்…

மேலும்...

பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட கொரோனா தடுப்பூசியின் பெயர் இதுதான்!

புதுடெல்லி (02 மார்ச் 2021): பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டுள்ள நிலையில், அவர் எந்த கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொண்டார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் அவர் கோவேக்சின் தடுப்பூசியை எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட தயாரிக்கப்பட்ட ஒரு தடுப்பூசியாகும். சில மாதங்களுக்கு முன் ஹைதராபாத்திலுள்ள ஒரு மருந்து ஆய்வகத்தைப் பிரதமர் மோடி விசிட் செய்த பாரத் பயோடெக் நிறுவனம்தான் முழுக்க முழுக்க இந்த கோவாக்சின் தடுப்பூசியை…

மேலும்...

பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்!

புதுடெல்லி (01 மார்ச் 2021): டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி இன்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்தேன். கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்த எங்கள் மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் விரைவான நேரத்தில் எவ்வாறு பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மூத்த குடிமக்கள் உள்ளிட்ட தடுப்பூசி எடுக்க தகுதியுள்ள அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா…

மேலும்...

பிரதமர் மீண்டும் தமிழகம் வருகை – சூடு பிடிக்கும் தமிழக அரசியல்!

சென்னை (25 பிப் 2021): தமிழகத்துக்கு ரூ.12 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான பல புதிய திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று கோவை வருகிறார். மாலையில் கோவை வரும் அவர், கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். முன்னதாக சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார். தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து சென்னை திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டு செல்கிறார். தொடர்ந்து…

மேலும்...