தேர்தல் ஆணையத்திற்கு மோடி ஆணையம் என பெயர் வைக்கலாம் – மம்தா சாடல்!

Share this News:

கொல்கத்தா (11 ஏப் 2021): தேர்தல் ஆணையத்தின் பெயரை ‘மோடி ஆணையம் ‘ என்று மாற்ற வேண்டும் என்று வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கோரியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வரும் நிலையில் கலவர பூமியாகியுள்ள கூச் பெஹார் மாவட்டத்திற்கு எந்த அரசியல் தலைவரும் 72 மணி நேரம் நுழைய அனுமதிக்கப்படவில்லை. இதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருந்தது.

அங்கு துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் வீடுகளுக்கு வருவதாக மம்தா பானர்ஜி அறிவித்ததை அடுத்து இவ்வாறு முடிவெடுத்ததாக மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மக்களுடன் நிற்கும் தனது நிலைப்பாட்டை யாராலும் தடுக்க முடியாது. மூன்று நாள் தடை முடிந்ததும் நான்காவது நாளில் கூச் பெஹார் வருகை தருவதாக மம்தா பானர்ஜி ட்வீட் செய்துள்ளார். முன்னதாக துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களுடன் மம்தா பானர்ஜி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார்.,

துப்பாக்கிச் சூடு தொடர்பாக மம்தா பானர்ஜி அரசாங்கமும் சிஐடி விசாரணையை அறிவித் துள்ளது.

வங்காளத்தில் நான்காவது கட்ட வாக்கெடுப்பின் போது பல பகுதிகளில் மோதல்கள் வெடித்தன. கூச் பெஹாரில் ஒரு வாக்குச் சாவடி முன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது..


Share this News:

Leave a Reply