அனைத்து நிறுவனங்களும் இந்தியாவைக் கைவிட்டு விட்டன – உச்சநீதிமன்ற பார் தலைவர்!

Share this News:

யர் இணைய இதழில் கரண் தாப்பர் உச்ச நீதிமன்ற பார் அசோஷியேசனின் மேனாள் தலைவர் துஷ்யந்த் தாவேவை பேட்டி கண்டுள்ளார். கோவிட் பேரலை சூழ்ந்துள்ள மிக மோசமான சமயத்தில் மோடி அரசு எப்படி இந்தியாவை ஒட்டுமொத்தமாக கைவிட்டது என்ற கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கும் தாவே, இந்த தருணத்தில் திருவாளர் மோடியின் ஒவ்வொரு நடவடிக்கையும் தோல்வியைத் துரத்துவதாகவே அமைந்துள்ளது என்கிறார்.. இதை விரிவாக விளக்கும் போது இந்த ஆளுகையின் முக்கிய குறைகளாக அவர் குறிப்பிடும் சிலவற்றைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

∆ கூட்டுப் பொறுப்பை (collective responsibility) விட்டும் மோடியும் அவரது அமைச்சரவையும் கைகழுவிக் கொண்டுவிட்டனர்.

∆ மோடி அரசின் இந்த தோல்வி ஒரு கிரிமினல் தோல்வி. உதாரணமாக பாதுகாப்பு அம்சங்கள் ஏதும் ஏற்படுத்தப்படாத ஒரு தொழிற்சாலையில் நடக்கும் ஒரு தீ விபத்தில் பலர் இறந்து போகிறார்கள் என்றால் அந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் மொத்தப் பேரையும் கைது செய்து அரசு சிறையில் அடைக்கக்கூடும். ஆனால் இங்கே ஒரு அரசாங்கத்தின் பொறுப்பற்றத்தன்மையின் விளைவுகளை – துன்பங்களை சாமான்யர்கள் தூக்கிச் சுமந்து திரிகிறார்கள்.

∆ 2019 பொதுத் தேர்தல் அறிக்கையான “சங்கல்ப் பத்ரா”வில் (உறுதிமொழி பத்திரம்) என்ன உறுதிமொழியைக் கொடுத்தார் பிரதமர் மோடி. இந்த தேசத்து மக்களின் கனவு இந்தியாவை கட்டமைப்பதே எங்களது புண்ணிய காரியம் என்றார். மேலும் விளிம்பு மக்களது வாழ்க்கைக்கு உத்திரவாதம் அளிக்கும் அடிப்படை பாதுகாப்பு வளையத்தை (safety net) உருவாக்குவது தங்களது முக்கியக் கடமை என்று தெரிவித்தது பாஜக.

¶ மேலும் பொது சுகாதாரத்தைப் பொறுத்தவரை மருத்துவ வசதியை அனைத்து மக்களும் அணுகக்கூடிய வகையில் மருத்துவக் கட்டமைப்பை பலப்படுத்துவோம் என்பதே பாஜகவின் அறைகூவலாக இருந்தது. வளர்ச்சி மற்றும் நல்லாளுகையின் பலன்களைக் கடைக்கோடி இந்தியனும் பெறவேண்டும் என்பதே பாஜகவின் இலக்காக சொல்லப்பட்டது. அந்த்யோதயா (கரீப் கல்யாண்) – கடையனுக்கும் கடைதேற்றம் என்பதெல்லாம் நடக்கும் சம்பவங்களில் காணாமல் போய்விட்டன.

¶ தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தை இந்த அரசு ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்து விட்டது. இரண்டாவது கொரானா அலையை எதிர்கொள்ள தேசிய திட்டம், தேசிய செயல்பாடுகள் என எதையும் இந்த அரசு முன்னெடுக்கவில்லை. கொரானாத் தொற்றைக் கட்டுப்படுத்தும் முறையான முன்னெடுப்புகளில் வெளிப்படையான அலட்சியமே (gross negligence) எங்கும் தென்பட்டது. இந்த அலட்சியம் மாநில அரசுகளுக்கும் தொற்றிக் கொண்டுவிட்டது.

¶ மாநில அரசுகள் என்ன ஏற்பாடுகளை செய்திருக்கின்றன.. கோவிட் எதிர்ப்புக்கான திட்டம் என்ன என்பதையெல்லாம் உறுதி படுத்திக் கொள்ளும் கடமை நடுவண் அரசை சார்ந்தது.. ஆனால் அதை செய்ய தவறியது மட்டுமல்ல.. அதற்கான கூட்டு நடவடிக்கை ஏதுமில்லாமல் பரிதாபமாக தோல்வியைத் தழுவி இருக்கிறார் பிரதமர்.

¶ கொரானா நோய்த் தொற்று குறித்து முழுமையான கட்டுப்பாடுகள் அறிவிக்கப் படாதபொழுதே டெல்லி மர்கஸில் கூடினார்கள் என்பதற்காக நூற்றுக்கணக்கான (வெளிநாட்டவர் உட்பட) வர்களை சிறையில் தள்ளிய மோடி அரசு, கொரானா உச்சத்தில் இருந்த போது கும்பமேளாவில் புனித நீராடிய லட்சக்கணக்கானவர்களைக் கண்டுக்கொள்ளவே இல்லை.. அவர்கள் கங்கைநீரோடு கொரானாவையும் நாடெங்கும் கொண்டுச் சென்றனர்.

¶ அரசமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட தேர்தல் ஆணையம் தமக்கும் இந்த தேசத்துக்கும் பெரும் பொல்லாங்கு (disservice) செய்துள்ளது.. இருக்கின்ற நிலையைக் கருத்தில் கொண்டு ஒன்று தேர்தலை ஒத்தி வைத்திருக்கலாம். அல்லது உரிய கட்டுத்தட்டுகளுடன் ஒரே சமயத்தில் விரைவாக நடத்தியிருக்கலாம். இந்த விடயத்தில் தேர்தல் ஆணையம் அரசியல் சக்திக்கு முற்றிலுமாக அடிபணிந்து போனது தெளிவாகத் தெரிகிறது.

¶ திருவாளர் மோடியின் நடவடிக்கைகளை எளிய, வெற்று அரசியல் நலன்கள் மட்டுமே உந்தித் தள்ளுகின்றன. மக்கள் நலனுக்கும் தேசநலனுக்கும் அவற்றில் எந்த சம்பந்தமும் இருப்பதைப் போல் தெரியவில்லை.. மார்ச் 2020ல் மோடி சொன்ன, “தோ கெஜ்கா தூரி.. மாஸ்க் ஜரூரி” (இரண்டு கெஜ தூரம்.. முக கவசம் கட்டாயம்) என்ற கோஷம் தேர்தல் பேரணியில் கரைந்து போனது.. (கோவிட் இறப்பு செய்திகள் வந்து குவிந்த நிலையிலும்) மேலும் மக்கள் திரளை உற்சாகப்படுத்த அவர் தயங்கவே இல்லை.

¶ கடந்த சில மாதங்களாக தேசத்தில் நடைபெறும் அனைத்து காரியங்களையும் உச்ச நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்றால் இந்த மக்களின் நலன்காக்க அதற்கு வழங்கப்பட்டுள்ள தன்னதிகாரங்களுக்கு (suo moto) என்ன பொருள் இருக்கிறது?

¶ இதே உச்ச நீதிமன்றம் பிஎம் கேர் நிதி ஒரு தனியார் அமைப்பு என்று தானாக முன்வந்து விளக்கமளித்ததே.. இந்த நிதியை வைத்து என்னவெல்லாம் செய்வோம் என்று பக்கம்பக்கமாக விளம்பரம் கொடுத்து பல கோடி நிதி திரட்டினார்களே அதெல்லாம் நீதிமன்றத்துக்கு தெரியாதா? கடந்த ஒரு வருட காலத்தில் அந்த பணம் என்ன ஆனது, எதற்காக செலவிடப்பட்டது என்று ஒரு வார்த்தையாவது வெளி வந்ததா என்பது குறித்த எந்த கேள்வியும் உச்சநீதிமன்றம் எழுப்பாமல் இருப்பது என்ன நியாயம்?

¶ டெல்லி தப்லீக் ஜமாஅத் விவகாரத்தில் ஒவ்வொரு முஸ்லிமையும் ‘நடமாடும் தீவிரவாதி’ யாக சித்தரித்த ஊடகம், மக்களோடு நிற்க வேண்டிய தருணத்தில் அதிகாரத்தின் பக்கம் நின்றிருக்கிறது. கவைக்குதவாத விவாத அரங்குகளில் (கோவிட் குறித்து இதய சிகிச்சை நிபுணர்களை பேட்டி காண்பது உட்பட) முற்றிலும் குறுகிய பார்வை (myopic) கொண்டதாகவே நடந்து கொண்டது. நடுநிலையான விமர்சனப் பார்வையின் மூலம் தேவையான அழுத்தங் கொடுத்து அரசை செயல்பட வைக்க வேண்டிய ஊடகம் மிக கேவலமாக இந்த தேசத்தை கைவிட்டிருக்கிறது..

இந்த நிலையில் –
இந்த தேசத்தை நேசிப்பவர்கள்
அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்ற கவிதை வரிகளையே குறிப்பிடுகிறேன்..

மேலும் ஜிம்மி ஜேம்ஸின் இந்த பாடலை இந்த நாட்டு மக்கள் நினைவில் நிறுத்த வேண்டும்..

Now it’s the time
To set things right..
Now it’s the time
For us to unite..

Liaqhat Ali Kalimullah


Share this News:

Leave a Reply