கொரோனா வந்தாலும் பாசிசம் தமிழகத்தில் வரவே முடியாது – நாஞ்சில் சம்பத் அதிரடி!

சென்னை (13 மார்ச் 2020): தமிழகத்தில் கொரோனா வந்தாலும் பாசிசம் வரவே முடியாது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ரஜினி நேற்று கட்சி தொடங்கும் அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அவரது பேட்டி புஸ்வானமானது. அனைத்து செய்தியாளர்களையும் அழைத்து ஏதேதோ சொல்லி, அவரிடம் எதிர்பார்த்த கட்சி தொடர்பான அறிவிப்பு கடைசி வரை வரவேயில்லை. இந்நிலையில் ரஜினியின் பேட்டி குறித்து நாஞ்சில் சம்பத் ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது: “கொரோனா வைரஸ் வந்தாலும் தமிழகத்தில் ஃபாசிச வைரஸ் வராது….

மேலும்...

ஆர்.எஸ்.எஸ். பிஜேபியைச் சேர்ந்த இந்தியருக்கு அமெரிக்கா ஜனாதிபதி வேட்பாளர் கல்தா!

வாஷிங்டன் (12 மார்ச் 2020): அமெரிக்கா. ஜனாதிபதி தேர்தில் போட்டியிடும் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் (Joe Biden) தமக்குத் தொடர்பாளராக நியமித்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமித் ஜானி என்பவரை அந்தப் பதவியிலிருந்து நீக்கியுள்ளார். அமித் ஜானி அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியில் பல காலமாக செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன் அமித் ஜானியை முஸ்லிம் சமூகத் தொடர்பாளராகவும் தேர்தல் பிரச்சாரத்தின் டைரக்டராகவும் நியமித்திருந்தார். ஜோ பிடனின் ஆதரவாளர்கள்…

மேலும்...

பாஜகவில் சேர்ந்த சிலமணி நேரங்களில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு அடித்தது ஜாக்பாட்!

புதுடெல்லி (11 மார்ச் 2020): பா.ஜ.க.வில் சேர்ந்த சில மணி நேரங்களில் மத்திய பிரதேசத்துக்கான மாநிலங்களை தேர்தல் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியாவை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல் மந்திரி கமல்நாத் தலைமையில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அந்த மாநிலத்தின் வலுவான மூத்த தலைவராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்தார். பா.ஜ.க. தலைவர்களை சந்தித்து பேசிய அவர் அடுத்தகட்ட நடவடிக்கைகளில் ஈடுபடுவது குறித்து ஆலோசித்தார். ஜோதிராதித்ய சிந்தியாவை…

மேலும்...

தமிழக பாஜக தலைவராக எல்.முருகன் நியமனம்!

சென்னை (11 மார்ச் 2020): தமிழக பாஜக தலைவராக எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் செலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் பாஜக மாநில தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்நிலையில், புதிய பாஜக தலைவர் எல்.முருகனை பாஜக தேசிய தலைவர் ஜெ.பி நட்டா அறிவித்துள்ளார். எல் முருகன் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்ட கல்லூரியில் பி.எல். படிப்பும்,…

மேலும்...

மும்பையிலும் டெல்லி கலவரம் போல் நடத்த பாஜக விருப்பம் – சிவசேனா குற்றச்சாட்டு!

மும்பை (11 மார்ச் 2020): மும்பையிலும் டெல்லியைப் போல் கலவரம் நடத்த பாஜக விரும்பியதாக சிவசேனா குற்றம் சாட்டியுள்ளது. உத்தவ் தாக்கரே அயோத்தி பயணம் மேற்கொண்டதையும், ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடி நன்கொடை வழங்கியதையும் பாஜக விமர்சித்து வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனாவின் பத்திரிகையான சாம்னா பதிலளித்துள்ளது. இதுகுறித்து அதில் கூறப்பட்டிருப்பதாவது: உத்தவ் தாக்கரே அயோத்தி சென்றதற்கு பா.ஜனதாவினர் மகிழ்ச்சி தான் அடைந்திருக்க வேண்டும். ஆனால் பா.ஜனதாவினரால் உத்தவ் தாக்கரே அயோத்தி…

மேலும்...

இந்துத்வாவிற்கு மீண்டும் திரும்பிய உத்தவ் தாக்கரே!

லக்னோ (11 மார்ச் 2020): இந்துத்வாவை விட்டு நான் விலகவில்லை என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். பாஜக கூட்டணியை முறித்துக் கொண்டு தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைத்து மகாராஷ்டிராவில் ஆட்சியை பிடித்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ 1 கோடியை நன்கொடையாக வழங்கினார். இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, ” இது மகாராஷ்டிர அரசு பணம் அல்ல, இது எனது அறக்கட்டளையிலிருந்து தரப்பட்டுள்ள…

மேலும்...

மோடிக்கு கொரோனா ஆதரவு – எஸ்.வி.சேகர் சர்ச்சை கருத்து!

சென்னை (10 மார்ச் 2020): கொரோனா பிரதமர் மோடிக்கு ஆதரவாக செயல்படுவதாக எஸ்வி சேகர் சர்ச்சையான கருத்தை வெளியிட்டுள்ளார். கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவைத் தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து, இத்தாலி, ஈரான் மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே பெரும் அச்சம் எழுந்துள்ளது. உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க இந்தியா உட்பட உலக நாடுகள் பலவும்…

மேலும்...

குஜராத்தில் ஏபிவிபியை வீழ்த்திய காங்கிரஸ் மாணவ அமைப்பு!

அஹமதாபாத் (09 மார்ச் 2020): குஜராத் பல்கலைக்கழக கல்லூரி மாணவர் சங்க தேர்தலில் காங்கிரஸ் மாணவ அமைப்பு வெற்றி பெற்றுள்ளது. குஜராத் பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தலில் பாஜக ஆதரவு பெற்ற சங்கமான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் மற்றும் காங்கிரஸின் நேஷனல் ஸ்டூடண்ட்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா ஆகியவை போட்டியிட்டன. இந்த தேர்தலில் 8 பதவிகளில் 6 பதவிகளை காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஸ்டூட்ண்ட்ஸ் யுனியன் ஆஃப் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. தற்போது மத்திய…

மேலும்...

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு – மருத்துவமனைக்கு சீல்!

அலகாபாத் (09 மார்ச் 2020): உத்திர பிரதேசத்தில், கணவர் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவரது மனைவியின் மருத்துவமனைக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். டாக்டர் மாதவி என்பவர் ஸ்கேன் பரிசோதனை செய்யும் மருத்துவமனை வைத்துள்ளார். இவரது கணவர் ஆஷிஷ், அகில இந்திய கிஷான் மஜூர் சபாவின் செயலாளராக உள்ளார். இவர் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடுபவர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார். இதனை அடுத்து அவரது மனைவியின் மருத்துவமனைக்கு ஞாயிறன்று சோதனை என்ற பெயரில் சென்ற போலீசார், டாக்டர் மாதவியின்…

மேலும்...

மத்திய அரசின் திறமையின்மையால் மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி – ப.சிதம்பரம் பாய்ச்சல்!

சென்னை (07 மார்ச் 2020): நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள யெஸ் வங்கியில் இருந்து வாடிக்கையாளா்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசின் நிா்வாகத் திறமையின்மையை இந்தப் பிரச்னை வெளிக்காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். வாராக் கடன் பிரச்னையால் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தனியாா் வங்கியான யெஸ் வங்கியை இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. வங்கியில் இருந்து ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு…

மேலும்...